Feeds:
Posts
Comments

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தனக்கு எதிராகக் கொண்டுவரப்படக்கூடிய தீர்மானத்தில் இருந்து தப்புவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசு, மேற்குலகின் முக்கிய நாடுகளுக்கு விடுத்த தூது முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. மேற்கு நாடுகளுடன் பேசி இலங்கைக்கு எதிரான அவற்றின் கடும் போக்கை மாற்ற மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நஷீட்டின் உதவியை கொழும்பு நாடி இருந்தது.

எனினும் இது தொடர்பில் நஷீட் விடுத்த கோரிக்கைகளை மேற்கு நாடுகள் நிராகரித்துவிட்டன என்று இராஜதந்திர வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் மீள் பரிசீலனை செய்யப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலுள்ள மாலைதீவு ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நெருக்கமானவர். எனவேதான் மேற்கு நாடுகளுடன் பேசி இணக்கம் ஒன்றுக்கு வருவதற்கு அவரது உதவியைக் கொழும்பு நாடி இருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடன் மாலைதீவு ஜனாதிபதி பேச்சுக்களை நடத்தினார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திலுள்ள முக்கியமானவர்களுடனும் பிரிட்டனின் வெளியுறவுத்துறை உயர் மட்டத்தினருடனும் தொடர்பு கொண்ட மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு எதிரான கடும்போக்கை இந்த நாடுகள் மேற்கொள்வது சரியல்ல என்று கேட்டுக்கொண்டார்.

மனித உரிமை மீறல்கள் இலங்கையில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுவது தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது எனவும் இதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் மாலைதீவு ஜனாதிபதி இந்த இரு நாடுகளுக்கு எடுத்துக் கூறியிருக்கிறார். எனவே தவறான தகவல்களின் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது நல்லதல்ல என்ற வாதத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.ஆனால் மாலைதீவு ஜனாதிபதியின் இந்தக் கோரிக்கையை மேற்படி நாடுகள் முற்றாக நிராகரித்துள்ளன என்று கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.

மனித உரிமை மீறல்கள் குறித்தான சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை அரசு இதுவரை சரியான பதிலை வழங்கவில்லையென்று சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்காவும் பிரிட்டனும், இலங்கை தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சரியான வகையில் தெளிவுபடுத்தவேண்டும் என்றும் எடுத்துக்கூறியிருக்கின்றன.அப்படிப்பட்ட ஒரு நிலையில், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பதற்கு இலங்கைக்கு இன்னும் மூன்று மாத கால அவகாசத்தை வழங்கவேண்டுமென மாலைதீவு ஜனாதிபதி இந்த நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார

 

ஐயா! யாழ்ப்பாணத்தில் என்ன நடக்குது 

 பொழுது சாய்ந்தால் மர்ம மனிதனின் பயம். விடிந்தால்; மர்ம மனிதன், பெண் கடத்தல், சிறுமியைக் காணவில்லை இப்படியான திகில் சம்பவங்கள். ஐயா! யாழ்ப்பாணத்தில் இப்போது என்ன தான் நடக்கின்றது எனத் தெரியாமல் உள்ளது. யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் பயப்பீதியில் உறைந்து போயிருக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மெளனமாக இருக்கின்றார்கள். இதை நாம் கூறினால் கூட்டமைப்புக்கு எதிர் என்று சொல்வார்கள். ஐயா! யாழ்ப்பாணத்தில் நடக்கின்ற சம்பவங்களை ஆராய்ந்து பார்க்கும் போது அவசரகாலச்சட்டத்தை நீடிக்கும் எண்ணத்துடன் சம்பந்தப்பட்டதென்று கூறமுடியாது. அப்படியானால் இவை ஏன்? என்று தீர ஆராய்ந்தால், உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்களிப்புக் காரணமாக இவர்களை நிம்மதியாக வாழவிடக்கூடாது என்ற நினைப்போடு நடப்பதாகவே தெரிகின்றது. நிலைமை இதுவாக இருக்கும் போது தமிழ் மக்கள் வாக்களித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள், மர்மமனிதன் என்ற பிரச்சினை நடக்கும் இடங்களுக்கு உடனடியாகச் சென்று விசாரணை நடத்துவது, அந்தப்பகுதி பொலிஸ் பொறுப்பதிகாரி, படை அதிகாரி ஆகியோருக்கு நிலைமையை எடுத்துக் கூறுவது, குய்யோ முறையோ என்று நாடாளுமன்றத்தில் கூப்பாடு போடுவது, தேவையாயின் உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்களையும் அழைத்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருப்பது. இப்படியல்லவா செய்ய வேண்டும்? ஆனால் எதுவுமே நடைபெறவில்லை. ஒரு சில பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்றிருந்தாலும் ஏனையவர்கள் எங்கே? அவர்கள் அடுத்த தேர்தலின் போதுதான் வருவார்களா? தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தமைக்காக இப்படிக் கொடூரம் நடக்கும் போது – அது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில், நாம் வாக்களித்தது தவறு என்ற முடிபை தமிழ் மக்கள் எடுப்பார்கள். அப்படியானதொரு முடிபை தமிழ் மக்கள் எடுத்துவிட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மீட்சியே இல்லை. உங்களுக்கு வாக்களித்துவிட்டு நாங்கள் உபாதைப்படும் போது நீங்கள் உங்கள் சொந்த அலுவலில் கவனமாக இருந்தால், மீண்டும் ஒரு தடவை உங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும். இந்த முடிபை மக்கள் எடுப்பார்களா? என்பதை பார்ப்பதற்கு நீண்டகாலம் காத்திருக்க வேண்டியதில்லை. வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அதனை அனுபவிக்க முடியும். ஆகையால் கூட்டமைப்பினர் உடனடியாக யாழ்ப்பாணத்தில் முகாமிட்டு போர்க்கொடி தூக்க வேண்டும். அன்னா ஹசாரே போல் உண்ணாவிரதம் இருக்காவிட்டாலும் உண்ணாவிரதம் என்ற பெயரில் ஒரு நாளாவது குந்தியிருங்கள். உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்.

வலம்புரி

ஆறுமாத காலமாக அரசுடன் நடத்திய பேச்சு மூலம் எதுவும் நடக்கவில்லை. இதனைத் தொடர முடியாது. நாங்கள் இது பற்றி அரச தரப்பினருக்குச் சொல்லியிருந்தோம். பேச்சைத் தொடர வேண்டும் என்பதற்காக அர்த்தமற்ற பேச்சில் நீண்ட காலம் ஈடுபட முடியாது. அப்படிச் செய்வதன் மூலம், தமிழர் பிரச்சினைக்கு நியாயமான ஒரு தீர்வைக் காண்பதற்கு அரசு ஆக்கபூர்வமான வகையில் பேச்சுக்களில் ஈடுபடுகின்றது என்று உலகம் கருதுவதற்கு நாம் இடமளிக்க முடியாது. இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். 

உதயன் பத்திரிகைக்கான இரா. சம்பந்தனுடனான பேட்டியின் விவரம் வருமாறு:

கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு அரசு பதிலளிக்காத நிலையில் உங்கள் அடுத்த அரசியல் நகர்வு என்ன?அடுத்த கட்டப் பேச்சைத் தொடருவதற்கு முன்பாக நாங்கள் முன்வைத்த 3 விடயங்களுக்குப் அவை நிபந்தனைகள் அல்ல பதிலாக தன்னுடைய நிலைப்பாட்டை அரசு முன்வைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தோம். சுருக்கமாகச் சொல்வதானால் நாங்கள் இந்தப் பேச்சு மூலம் ஒன்றையும் அடையவில்லை.  அதற்காக நாங்கள் அரசுடன் பேச மாட்டோம் என்று சொல்வில்லை. அரசியல் தீர்வை காண்பதற்கு நாங்கள் பேசத் தயங்கவில்லை. அதற்கு உண்மையில் இரு பகுதி யும் இதயசுத்தியுடன் உண்மை யாகப் பேசவேண்டும். நாங்கள் மட்டும் பேசிப் பயன் இல்லை. இருபகுதியும் ஆக்கபூர்வமாகப் பேசவேண்டும்.

இப்போதைக்கு நாங்கள் நிலை மைகளை அவதானித்துக் கொண்டி ருக்கின்றோம். எடுக்க வேண்டிய முடிவுகளை எடுக்க வேண்டிய நேரத்தில் சரியாக எடுப்போம். எங்களது தீர்வு தொடர்பான நிலைப்பாட்டடில் மூன்று விட யங்களை முன்வைத்திருந்தோம். ஒன்று ஆட்சிக் கட்டமைப்பு, சட்ட அதிகாரம், நிர்வாக அதிகாரம். மத்திய அரசுக்கும் அதிகாரபகிர்வு அலகுக்கும் இடையில் கருமங்கள், கடமைகள் எவை என்ற பிரிப்பு, நிதி மற்றும் வரி வசூலிப்பு ஆகிய மூன்று விடயங் களைத் தெளிவுபடுத்துமாறு  கேட்டி ருந்தோம். அவை தொடர்பான அரசின் நிலைப்பாட்டை அறியாமல் பேச்சைத் தொடர்வதில் அர்த்தமில்லை.

நீங்கள் முன்வைத்த விடயங்களுக்குப் பதிலளிக்காத போதும், இந்த இருவார காலப்பகுதியில் அரச தரப்பினர் உங்களுடன் தொடர்பு கொண்டார்களா உத்தியோகபூர்வமான முறையில் எதுவும் பேசவில்லை. உத்தியோகப்பற்ற முறையில் சில விடயங்களை கலந்துரையாடினர். அதைப் பற்றி இப்போது பேச விரும்பவில்லை.

அப்படியானால் கூட்டமைப்பு அடுத்து என்ன செய்யப் போகிறது?

அடுத்த கட்டம் பற்றி பேசுவதற்கு இன்னும் காலம் வரவில்லை.  இரு வார காலத்துக்குள் பதிலளிக்குமாறு நாங்கள் கேட்டிருந்தோம். சமீபத்தில் நடந்த பேச்சுக்கள் ஒரு மாதத்துக்கு இரண்டு என்ற அடிப்படை யில் நடைபெற்றன. ஆரம்பத்தில் ஒரு மாதத்துக்கு ஒரு பேச்சு இடம்பெற்றது. பேச்சை இழுத்தடிக்க விரும்பாததால் பின்னர் மாதத்துக்கு இரண்டாக அதனை அதிகரித்தோம். அந்த அடிப்படை யிலேயே இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நாங்கள் கேட்டிருந்தோம். இரண்டு வாரம் என்பதை நிபந்தனையாகக் குறிப்பிடப்படவில்லை. அரச தரப்பினர் நாடாளுமன்றத் தெரிவுக் குழு சம்பந்தமான பிரேரணை அச்சிட்டுவிட்டதாகக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அதனை அவர்கள் இன்னும் நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரவில்லை. அது எப்போது சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரியவில்லை. இதனை வைத்து அரசு பேச்சை இன்னும் முறித்துக் கொள்ளவில்லை என்று எடுத்துக் கொள்ளலாம் போன்றும் தோன்றுகிறது.

நீங்கள் அரசு பேசுகிறோம் என்று கூறுகிறீர்கள். ஆனால், கடைசிப் பேச்சின் பின்னர் அரசு விடுத்த அறிக்கையில், சுதந்திரக் கட்சியே உங்களுடன் பேசுவதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது. அப்படி இருக்கையில் அரசுடனான பேச்சு என்று இதனை எப்படிச் சொல்ல முடியும்?

நாங்கள் பேச்சை ஆரம்பித்தது அரசுடன்தான். ஜனாதிபதி தான் எங்களுடன் பேசும் அரச குழுவை நியமித்திருந்தார். அரசில் பிரதானமான கட்சி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி. ஜனாதிபதியும் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர். பிரதமரும் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்தான். அவர்களுடைய கூட்டுக் கட்சிகள் எண்ணிக்கையில் அதிகம். இருப்பினும் நாங்கள் இதுவரை காலமும் அரசுடன் தான் பேசினோம். இறுதிக் கட்டத்தில்தான் அவர் கள் ஸ்ரீ  லங்கா சுதந்திரக் கட்சியு டன் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு பேசியது என்று சொன் னார்கள். அவர்களுக்கு நாங்கள் வழங்கிய இரண்டு வாரகாலத்துக் குள் அரசில் அங்கம் வகிக்கின்ற சகல கட்சிகளுடனும் பேசி அது பற்றி அறிவிக்க முடியாது என்று சொல்வதற்காக பேச்சு சுதந்திரக் கட்சிக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் நடந்ததாக அவர்கள் காட்ட முற்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் அரசில் உள்ள ஏனைய கட்சிகளுடன் ஏற் கனவே பேசிக்கொண்டிருப்ப தாக எம்மிடம் கூறியிருந்தார்கள். எங்களுடைய நடவடிக்கை எதிர் காலத்தில் எவ்வாறு அமையும் என்று கூறுவதற்கான காலம் இன்னும் கனியவில்லை.

கூட்டமைப்புக்கு பதிலளிக்காத நிலையில் நாடாளுமன்றத் தெரிவுக் குழு பற்றியே அரசு அக்கறையு டன் பேசுகிறது. அப்படி ஒரு நிலை வந்தால் கூட்டமைப்பு தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்குமா?

நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு அங்கீகரிக்கின்றத்துக் கான வாய்ப்புக்கள் இருப்பதா இல்லையா என்ற முடிவை இப் போது சொல்ல முடியாது. தெரி வுக்குழு என்ன அடிப்படையில் இயங்கப்போகின்றது, அதில் என்னென்ன அம்சங்கள் உள்ளடக் கப்பட்டுள்ளன என்பவற்றைக் கூர்ந்து கவனிக்க வேண்டி இருக் கிறது. இது தொடர்பில் நிறைய விடயங்கள் சிந்திக்க வேண்டி யுள்ளது.

அதேவேளை, பயனற்ற ஒரு அணுகு முறையில் நாங்கள் பங்கு பற்றுவதிலும் எதுவும் நடக்கப் போவதுமில்லை.

பேச்சு தடங்கலுக்குள் சிக்கிக் கொண்டுள்ள நிலையில் இந்தியா வின் நிலைப்பாடு என்ன?

இந்தியா ஒன்றும் தெரிவிக்க வில்லை. இந்தியாவினால்தான்  பேச்சு ஆரம்பிக்கப்பட்டது. எம் மைப் பொறுத்த வரையில் கடந்த 5 மாத காலமாக எதுவும் இடம் பெறவில்லை. எனவே இதனைத் தொடர முடியாது என்பதை அவர்களுக்குச் சொல்லியிருந் தோம். அவர்கள் அரசுடனும் பல முறை பேசி இருக்கிறார் கள். எம்முடனும் பேசி இருக் கிறார்கள். தொடர்ந்தும் பேசி வருகிறார்கள்.

எல்லாத் தமிழ்க் கட்சிகளை யும் சுதர்சன நாச்சியப்பன் புதுடில் லிக்கு அழைத்துள்ளாரே இதன் நோக்கம் என்ன?

மனித உரிமைகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமையம் ஏற்பாடு செய்த கலந் துரையாடலுக்கு அழைத்திருக் கின்றார்கள். நாச்சியப்பன் என் னையும் தொடர்பு கொண்டு பேசினார். ஆனால் நான் அதில் கலந்து கொள்ளவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சித் தலைவர்கள் புதுடில்லி செல்கின்றார்கள். அத்துடன் வேறு கட்சித் தலை வர்களும் செல்கின்றனர்.தமிழ்க் கட்சிகளின் ஒட்டு மொத்தமான நிலைப்பாட்டை இந்தியா அறிவதற்காகவே இந் தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேசம யம் தமிழகத்தில் இப்போது நிலைமைகளில் பெரும் மாற் றங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்திய மார்சிஸ்ட் கட்சி அண்மையில் சென்னையில் ஒரு பெரிய மாநாடு நடத்தி இருந்தது. பாரதீய ஜனதாக் கட்சி அடுத்த மாதம் அத்தகைய ஒரு மாநாட்டை நடத்த உள்ளது. எனவே இந்தி யாவைப் பொறுத்த வரையில் ஆளும் கட்சிக்கு அப்பால் ஏனைய கட்சிகளும் எமது விடயத்தில் அக்கறை செலுத்துகின்றன. தமிழக சட்ட சபையிலும் எமக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல தலைவர் கள் தொடர்ந்து எமக்காகக் குரல் கொடுத்து வருகிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வைச் சந்தித்துப் பேசும் ஏற்பாடு கள், முன்முயற்சிகள் ஏதும் எடுக்கப்பட்டிருக்கின்றனவா?

தமிழக முதல்வரை சந்திக்க வேண்டிய தேவை இருக்கின் றது. அவரை நாங்கள் சந்திப்போம். அவர் சட்டசபையில் பல தீர் மானங்களை நிறைவேற்றியுள் ளார். இலங்கை தமிழர் பிரச்சினை தீரும் வரையில் தமிழ் நாட்டு அரசின் நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்திருக் கின்றார். ஆகவே நாம் அவரு டன் சந்திப்பொன்றை மேற் கொள்ளவுள்ளோம். அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். கோத்தபாய ராஜபக்ஷ அண் மையில் “ஹெட்லைன்ஸ் ருடே’ தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில், புலிகளை ஒழித்து விட்டதால் தமிழர்களுக்கு இனி மேல் உரிமைகளை வழங்கவேண் டியதில்ல என்று கூறி இருக்கிறாரே அது பற்றி உங்கள் கருத்து என்ன? இந்த மாதம் 4ஆம் நாள் அரசு டனான பேச்சுக்கு அடுத்த திகதி குறிப்பதற்கு முன்பாக சில விட யங்களை அரசு தெளிவுபடுத்த வேண் டும் என்ற முடிவை நாங்கள் எடுத்த பொழுது, கோத்தபாய வின் பேட்டி பற்றி எமக்குத் தெரிந்தே இருந்தது. அரசாங்கத்தின் தற்போதைய போக்கை பார்த்தால் அரசில் கோத்த பாயவின் குரல் ஓங்குவதைப் போலவே தெரிகின்றது.

புலிகளுக்கும் அக்கா கணக்குக்கும் பணம் கொடுத்தவர்கள் யார்?

2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 200 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாகக் கூறியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சுனாமி நிவாரண நிதியில் 300 மில்லியன் ரூபா களவாடி தனது சகோதரியின் கணக்கில் வைப்பிலிட்டவர் யார் என மக்கள் விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றுக்குச் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்கள் வாக்களிப்பதனை தடுத்து நிறுத்தும் நோக்கில் புலிகளுக்கு இந்தப் பணம் வழங்கப்பட்டது. இந்த பணத்தைப் பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் நவீன ரக படகுகளை கொள்வனவு செய்தனர்.எனவும் தெரிவித்தார்

ஒஸ்லோவில் அண்மையில் நடந்த படுகொலைகளை அடுத்து ஸ்தாபன அரசியல் கட்சிகளும் செய்தி ஊடகமும் தங்கள் பின்னணியை மூடி மறைப்பதில் முனைப்புக் காட்டுகின்றன. 32 வயதான கொலைகாரர் ஆண்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரீவிக் தனியே செயல்பட்டாரா, இல்லையா என்பது இன்னும் தெளிவாகவில்லை. என்றாலும் ஒன்று மட்டும் உறுதி. அதாவது அமெரிக்காவின் அனைத்து அரசியல் கட்சிகளினதும் ஆதரவிற்குட்பட்ட மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவ ஸ்தாபனம் மற்றும் செய்தி ஊடகத்தின் ஆதரவைக் கொண்ட முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரத்திற்கும் 76 பேரைக் கொன்ற பாசிஸ்ட்டின் அரசியல் உந்துதல்களுக்கும் இடையே நிச்சயமான தொடர்பு உள்ளது. முதல் நீதிமன்ற விசாரணையின்போது ப்ரீவீக் நாட்டினுள் ஏராளமான முஸ்லிம் மக்களை அனுமதித்து நோர்வீஜியக் கலாசாரத்தைச் சீரழித்துவிட்டதால் நோர்வேயின் சமூக ஜனநாயக தொழிற்க் கட்சியின் மீது மிக அதிக சேதத்தை ஏற்படுத்த விரும்பியதாக அறிவித்தார். அவருடைய இஸ்லாமிய எதிர்ப்பு பிளக் வலைத்தளக் கட்டுரைகள் மற்றும் 1,500 பக்க அறிக்கை ஆகியவற்றிலிருந்து ப்ரீவிக் முஸ்லிம் குடியேறியவர்கள் மற்றும் அவர் கருதிய மார்க்சிஸ்ட்,இடது,பன்முகக் கலாசாரம் மற்றும் அரசியல் உண்மை ஆகிய அனைத்தின் மீதும் தன் இரத்த வெறித் தாக்குதலை நடத்த விரும்பினார் என்பது தெளிவு. அவர் நோர்வீஜிய தொழிற் கட்சியை இலக்கு கொள்ள முற்பட்டதன் காரணம் அவர், அதை ஒரு மார்க்சிஸக் கட்சியாகவும் குடியேறுபவர்கள் சார்புடையது என்று தவறாகக் கருதியதுதான். ப்ரீவிக்கின் வெளிப்படையான பாசிசக் செயல்கள் மற்றும் நன்கு அறியப்பட்டுள்ள தீவிர வலதுசாரித் தொடர்புகளாலும் இன்னும் துல்லியமாகக் கூறினால் அவற்றால் தான் செய்தி ஊடகம் அவருடைய கொடூரத்தை எடுத்துக் காட்டும் அரசியல் பிரச்சினைகளை மூடி மறைக்கப் பெரும் முயற்சிகளை எடுத்து அவர் ஒரு தனியான மனநிலை குழம்பியவர் என்பதைத் தவிர வேறு ஏதும் இல்லை எனச் சித்திரிக்க முற்பட்டுள்ளது. ஆனால்,அவருடைய கருத்துகள் ஒன்றும் ஒரு தனிநபரின் நோய்வாய்ப்பட்ட மனநிலையின் உருவாக்கங்கள் அல்ல. மாறாக ஒரு நோய்வாய்ப்பட்ட சமூக அமைப்பு முறையின் விளைவுகள்தாம். அவர் தன்னுடைய இணையத்தள வெளியீட்டிற்கு முஸ்லிம் எதிர்ப்பு பிளக் தளக் கட்டுரைகள், அமெரிக்க கூஞுச் கச்ணூtதூ இயக்கம் மற்றும் ஐரோப்பாவிலுள்ள ஜனரஞ்சகவாத வலதுசாரிக் கட்சிகளிலிருந்து பாசிச பிதற்றல்களை ப்ரீவிக் அப்படியே எடுத்துக்கொண்டது மட்டும் இல்லாமல், முக்கிய முதலாளித்துவக் கட்சிகள், அரசாங்கங்கள், பொது அதிகாரங்கள் மற்றும் செய்தி ஊடக அலுவலகங்களின் பிரசாரங்களிடம் இருந்தும் எடுத்துக் கொண்டார். இத்தகைய இடைவிடாத இனவெறுப்பு,தேசியவாதம்,குடியேறுவோருக்கு எதிரான சோவனிஷம் மற்றும் இராணுவவாதம் ஆகியவை ஒஸ்லோவில் நடைபெற்ற நடவடிக்கை போன்றதற்கு ஊக்கம் கொடுத்தல் என்பது காலத்தினால் விளைந்துவிடக் கூடியதுதான். இஸ்லாமிய எதிர்ப்புப் போராட்டத்தை தங்கள் செயற்திட்டத்தின் மைய அச்சாகக் கொண்ட கட்சிகள் ஆஸ்திரியா, இத்தாலி,நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளின் அரசாங்கங்களில் இருந்துள்ளன. அல்லது தற்பொழுது உள்ளன. பிரான்ஸில் பாசிச தேசிய முன்னணி கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் இனவெறி,குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகளை முக்கிய கட்சிகள் எதிரொலிக்கின்றன. இவற்றின் தன்மையானது ஜனாதிபதிப் பதவிப் போட்டிக்கு அக்கட்சி தீவிர ஆர்வம் கொண்டுள்ள அளவிற்கு உள்ளது. நோர்வேயில் ப்ரீவிக் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்த இஸ்லாமிய எதிர்ப்பு முற்போக்குக் கட்சி அரசியல் ஸ்தாபனத்தில் இணைக்கப்பட்டு நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய கட்சியாக வெளிப்பட்டுள்ளது. பன்முகக் கலாசார சமூகத்திற்கு எதிரான அவருடைய போராட்டத்தில் ப்ரீவிக் முக்கிய ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்களின் தலைவர்களிடமிருந்து கருத்துகளைப் பற்றி எடுத்துள்ளார். ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல், பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கமரூன் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கெலாஸ் சார்கோஸி ஆகியோர் அனைவரும் பகிரங்கமாக “பன்முகக் கலாசார முறை’ அதாவது பல கலாசாரங்களில் இருந்து வரும் மக்கள் அமைதியாக, ஒன்றாக இருத்தல் என்பது தோற்றுவிட்டது என்று கூறியுள்ளனர். முதலாளித்துவ இடதானது முஸ்லிம்களுக்கு எதிரான தூண்டுதலில் சேர்ந்துள்ளது. பிரான்ஸிலும் பெல்ஜியத்திலும் சமூக ஜனநாயகக் கட்சியினர் “தீவிர இடது’ என அழைக்கப்படும் குழுக்களின் ஆதரவுடன் முஸ்லிம் தலை மறைப்புகள்,பர்காக்கள் ஆகியவற்றின் மீது பாகுபாடான முறையில் தடைகளுக்கு ஆதரவைக் கொடுத்துள்ளனர். ஜேர்மனிய சமூக ஜனநாயகக் கட்சியில் அதன் முக்கிய உறுப்பினர்களிடம் காணப்படும் முஸ்லிம் எதிர்ப்புக் கருத்தாய்வுகளில் திலோ சராஜின் உடையவை நியாயமான கண்ணோட்டம் என்று கருதப்படுகின்றன. படுகொலைகளைத் தொடர்ந்து உடனடியாகப் பல முஸ்லிம் எதிர்ப்பு பிளக் வலைத்தளக் கட்டுரை எழுதும் வலுதுசாரி ஜனரஞ்சகவாதக் கட்சிகளும் தேசிய கலாசாரத்திற்கு முரசு கொட்டுபவர்களும் ப்ரீவிக்கின் செயல்களைக் கண்டிப்பதன் மூலம் அவரிடம் இருந்து தங்களை ஒதுக்கிக் காட்டிக்கொள்ள முற்பட்டுள்ளன. இது வெறும் தந்திரோபாயம்தான். ஜேர்மன் கஃ (கணிடூடிtடிஞிச்டூடூதூ ஐணஞிணிணூணூஞுஞிt) வெளியிட்டுள்ள வலைத்தளக் கட்டுரை ஒன்றின்படி ப்ரீவிக்கின் அறிக்கை மிகச் சிறந்தது. ஆனால், அவரின் தாக்குதல் எதிர்விளைவுடையதாகவுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது. ப்ரீவிக்கின் அறிக்கையில் ஐரோப்பா இஸ்லாமிற்குத் தாழ்ந்து நிற்பதைக் கண்டிப்பதாக மேற்கோளிடப்பட்டுள்ள ஜேர்மனிய செய்தியாளர் ஹென்ரிக் எம்.ப்ரோடர், அவருடைய முஸ்லிம் எதிர்ப்புக் கருத்தாய்வுகளுக்கும் ஒஸ்லோ படுகொலைக்கும் இடையே தொடர்பு இல்லை என்று மறுத்துள்ளார். ஜேர்மனியின் முக்கிய செய்தித்தாளான ஈடிஞு ஙிஞுடூt டில் அவர் தன்னுடைய விரோதிகள் இஸ்லாமைக் குறைகூறுபவர்கள் மீது படுகொலைக்கான பொறுப்பைச் சுமத்துவதன் மூலம் அறநெறி ஆதாயம் பெற முற்படுகின்றனர் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். இஸ்லாமைக் குறைகூறுபவர்களுள் ப்ரோடர் தன்னையும் சராஜின் மற்றும் டச்சு வலதுசாரி ஜனரஞ்சகவாத கீர்ட் வில்டெர்ஸையும் சேர்த்துக் கொள்ளுகிறார். பல ஆண்டுகளாக ஈஞுணூ குணீடிஞுஞ்ஞுடூ, ஈடிஞு ஙிஞுடூt ஆகியவற்றின் பக்கங்களை ப்ரோடர் நிரப்பியிருப்பதுடன், பல வலைத்தளக் கட்டுரைகள், நூல்கள் மூலமும் ஐரோப்பியர்கள் இஸ்லாமிற்கு நிபந்தனையற்ற சரணடைதலை எதிர்த்து எச்சரிக்கைகளைக் கொடுத்துள்ளார். அவருடைய கருத்துகள் ப்ரீவிக்கினால் மேற்கோளிடப்பட்டுள்ளது குறித்து அவர் வருத்தப்படுகிறாரா என்று செய்தியாளர் ஒருவரால் கேட்கப்பட்டபோது, ப்ரோடர் நான் இன்றும் கூட அதே கருத்துகளைத்தான் கூறுவேன் என்று விடையிறுத்தார். ஒரு குறுகிய காலத்திற்குப்பின் ப்ரோடர் தன்னுடைய பிளக் வலைத்தளத்தில் நன்மையின் அச்சு என்பதில் தன் மேற்கோள்களைக் கொண்டுள்ள ப்ரீவிக்கின் அறிக்கையில் இருந்து நீண்ட பத்திகளை வெளியிட்டார். இம்மேற்கோள்கள் தொடக்கத்தில் மற்றொரு பிளக் வலைத்தளக் கட்டுரையாளர் ஊடீணிணூஞீட்ச்ண உடையவை. அவர் வலது தீவிர ஆணூதண்ண்ஞுடூண் ஒணிதணூணச்டூ,எச்tஞுண் ணிஞூ ஙடிஞுணணச் மற்றும் ஐண்டூச்ட் ஙிச்tஞிட போன்ற வலைத்தளங்களிலும் எழுதுபவர். ப்ரீவிக் தன்னுடைய அறிக்கையைத் தயாரிப்பதற்கு ஊடீணிணூஞீட்ச்ண தான் முக்கிய ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டவர் ஆவார். தீவிர வலதுசாரி முஸ்லிம் எதிர்ப்புச் சக்திகள் மற்றும் தீவிர செய்தி ஊடகங்கள் ஈடிஞு ஙிஞுடூt,ஈஞுணூ குணீடிஞுஞ்ஞுடூ ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகள் பற்றி அத்தாட்சி தேவையாக இருந்ததால் ப்ரோடர் அவற்றை அளித்துள்ளார். தீவிர வலுதசாரி இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கங்களும் ஸ்தாபன மயமான முதலாளித்துவ வட்டங்கள் அவற்றிற்குக் கொடுக்கும் ஊக்கமும் முதலாளித்துவ சமூகத்தின் நெருக்கடி மற்றும் சிதைவைத்தான் பிரதிபலிக்கின்றன. ஆரம்ப தயக்கத்திற்குப் பின் ஜேர்மனியின் ஆளும் வர்க்கம் 1930 களில் ஹிட்லருக்கு ஆதரவைக் கொடுத்து தேசிய சோசலிஸ்டுகளை தொழிலாளர் இயக்கத்தை நசுக்குவதற்கும் பொருளாதாரத் தேக்கத்திலிருந்து நாட்டை விடுவிக்கத் தேவையான புதிய போரைத் தொடக்குவதற்கும் ஒரு திறமையான கருவி என்று கருதியது. இன்று அருகிவிட்ட முதலாளித்துவ சமூகம் மீண்டும் முதலாளித்துவ வர்க்கம் பாசிசச் சக்திகளுக்கு ஆதரவைக் கொடுப்பதைத்தான் காண்கிறது. செப்டெம்பர் 11,2001 தாக்குதல்களுக்குப் பின் இஸ்லாமிய எதிர்ப்புப் போராட்டம் முதலில் ஆப்கானிஸ்தான் பின்னர் ஈராக், இப்பொழுது லிபியா என ஏகாதிபத்திய போர்களுக்கு ஆதரவைத் திரட்டுவதற்கு முக்கிய வழிவகையாயிற்று. அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்,ஈராக் போரை “சிலுவை யுத்தம்’ என்று குறிப்பிட்டபோது, அது ஒன்றும் ப்ரீவிக்கில் இருந்து அதிக தொலைவில் இருந்துவிடவில்லை. ப்ரீவிக் தன்னை சிலுவை யுத்தத்தை நடத்தியவர்களில் தற்காலத்திய மறுபிறப்பு என்று கருதுகிறார். அதேநேரத்தில் முஸ்லிம் குடியேறுபவர்களுக்கு எதிரான தூண்டுதல்கள் தொழிலாளர் வர்க்கத்தில் பிளவுகளை ஏற்படுத்தவும் பொதுநலச் செலவுக் குறைப்புகள், வேலையின்மை, பெருகிய சமூக சமத்துவமின்மை இவற்றிற்கு எதிரான சீற்றத்தை வலதுசாரித் திசைகளில் திருப்பப் பயன்படுத்தப்படுகிறது. எல்லா வலதுசாரி ஜனரஞ்சகவாதக் கட்சிகளும் இவ்வகையைத்தான் கையாளுகின்றன. அவை சமூக வார்த்தை ஜாலங்களை தேசியவாதம், வெளிநாட்டவர் வெறுப்பு ஆகியவற்றுடன் இணைகின்றன. தொழிலாளர் வர்க்கத்திற்கு முக்கிய ஆபத்து பாசிச சக்திகளின் உடனடியான வலிமையல்ல. அவை தற்பொழுது அதிகமாக மக்கள் ஆதரவைக் கொண்டிருக்கவில்லை. தொழிலாளர் வர்க்கம் தொடர்ந்து அரசியல் ரீதியாக முதலாளித்துவம் மற்றும் அதன் கட்சிகளுக்குத் தாழ்ந்து நிற்பதுதான் பெரிய ஆபத்து ஆகும். அவை உத்தியோகபூர்வ இடதாயினும் வலதுசாரிக் கட்சிகள் ஆயினும் ஏனெனில் அவை தொழிலாள வர்க்கத்தை முடக்கி முதலாளித்துவத்தின் வலதுசாரித தீவிர அமைப்புகளின் குழப்பத்தைப் பயன்படுத்துவதற்கும் மத்திய தர வர்க்க அடுக்கு,தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகியோரின் சில பிரிவுகளை நெறிபிறள்வடையச் செய்கின்றன. முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாளர் வர்க்கம் ஒரு சுயாதீன இயக்கமாக வெளிப்படுவதைத் தடுப்பதில் முக்கிய பங்கு தொழிற்சங்கங்கள், மத்தியதர வர்க்க முன்னாள் இடது என்னும் அவற்றின் நட்பு அமைப்புகளால் பங்காற்றப்படுகின்றன. ஒஸ்லோவில் நடைபெற்ற கொடூரத்தாக்குதல் தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீன வலிமை இறுதியில் அடக்கப்படும் என்ற நிலை பற்றிய எச்சரிக்கைதான். ப்ரீவிக் தன்னை ஒரு தியாகி எனவும் மேலும் ஒரு புதிய போர்க்குணமிக்க தீவிர வலதுசாரி இயக்கத்தின் முன்மாதிரி எனவும் காண்கிறார். இத்தகைய சக்திகள் பிரதிபலிக்கும் ஆபத்தைத் தோற்கடிப்பதற்கு தொழிலாளர்கள் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து முறித்துக் கொண்டு சமூகநலச் செலவு வெட்டுகள், வேலையின்மை, ஊதியக் குறைப்புகள் இவற்றிற்கு எதிரான சுயாதீனப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும். அது ஒரு சோசலிஷ வேலைத்திட்ட அடிப்படையில் இருக்க வேண்டும். போராட்டத்திற்கான புதிய அமைப்புகள் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தி அணிதிரட்டி இணைக்கப்பட வேண்டும் என்பதுடன் ஒரு புதிய புரட்சிகரத் தலைமையும் கட்டமைக்கப்பட வேண்டும். உலக சோசலிச இணையத்தளத்திலிருந்து

யாழில். வருடத்திற்கு 500 இளவயது கர்ப்பங்கள் மற்றும் 300 பாலியல் துன்புறுத்தல்கள்!
  யாழ்.மாவட்டத்தில் வருடந்தோறும் 500 இளவயதுக் கர்ப்பங்கள் மற்றும் 300 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாவதாக சுகாதார பணிமனையின் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

   சமூக சீர்திருத்த குறுந்திரைப்பட விழா சேர் பொன்.இராமநாதன் வீதியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றபோது இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

   தற்போதைய கணக்கெடுப்பின் விவரங்கள் அடிப்படையில் யாழ்.மாவட்டத் தில் 27 ஆயிரம் விதவைகள் உள்ளனர். இதில் யுத்தம் காரணமாக கணவனை இழந்தவர்களும் இயற்கை மரணத்தில் கணவனை இழந்தவர்களும் உள்ளடங்குகின்றனர்.

   இவர்கள் குடும்பத் தலைமைத்துவப் பொறுப்பு வாய்ந்தவர்களாக விளங்குகின்றனர். மேலும், பெண்கள், சிறுவர்கள் என்ற அடிப்படையில் மதிப்பீடு செய்தால் உடல், உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்கள் இவர்களேயாவர். நாள் ஒன்றுக்கு உள ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் 5 பேர் எனப் பதிவாகி உள்ளனர். அங்கவீனம் என்பதும் ஒரு வகையில் உளரீதியான பாதிப்புத்தான்.

   அத்துடன், ஒருமாதத்தில் 60 சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்படுகின்றனர். இவை யாவற்றுக்கும் காரணம் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறைதான்.அண்மைக் காலமாக கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில், இவற்றில் பெற்றோர்களின் பங்கும் உள்ளடங்குகிறது. தமது பிள்ளைகள் எங்கு செல்கின்றனர், யாருடன் உரையாடுகின்றனர் என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு பெற்றோர்களுடையது. சில பெற்றோர்கள் அந்தப் பொறுப்பைப் பெற்றுக் கொள்ளத் தவறி விடுகின்றனர். கல்வி அறிவுள்ள பெற்றோர்கள் மத்தியில் இவ்வாறான பிரச்சினைகள் தலை நிமிர்ந்து நிற்கின்றன. சமுதாயத்தின் மத்தியில் இவை ஆராயப்பட வேண்டும். இவையாவற்றுக்கும் தீர்வுகள் பெற்றோர் மத்தியில் உண்டு.

   அதுமட்டுமல்ல முன்னாள் போராளிகள் என இனங்காணப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் சமுதாயத்துடன் இணைத்துக் கொள்ளப்படல் வேண்டும். இவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள், பாதுகாப்பான வாழ்விடங்கள் ஆகியவற்றை இந்தச் சமுதாயம் தான் வழங்க வேண்டும்.

   வலுவிழந்தோர்கள், உளரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரை சமூகம் மதிக்க வேண்டும். சமூகத்துடன் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.ஒருபுறம் ஆக்கபூர்வமான செயற்றிட்டங்கள் நடந்து கொண்டிருந்தாலும் மறுபுறம் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றவாறு உள்ளன.

   கொலைகள், கொள்ளைகள் என்பவற்றுக்கு வறுமை ஒரு காரணமாக அமைந்துள்ளது. இவர்களுக்கு அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, சமூகத்துடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

கனடாவிலுள்ள தமிழ் சமூகத்தினருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த பிரபல தமிழ் வர்த்தகர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் மொன்ரியலில் வசித்துவந்த சுந்தரம் யோகராஜா (வயது 64) என்பவரே கடந்த புதன்கிழமை குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சுந்தரம் யோகராஜாவின் இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றபோது பலநூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பாரியளவிலான முதலீடுகளை மேற்கொண்டு கடின உழைப்பில் ஈடுபடுபவர்களுக்கு அவர் (சுதந்திரம் யோகராஜா) ஒரு முன் உதாரணமானவர். முதலில் கனடாவில் வர்த்தகத்தை ஆரம்பித்தவர் பின்னர் குடும்பத்தினருடன் இங்கு வாழ்ந்து வருகின்றாரென தெற்காசிய நாடுகளின் பெண்கள் சமூக நிலை உறுப்பினர் ரமணி பாலேந்திரா கூறியுள்ளார்.

சுந்தரம் யோகராஜன் வீட்டிற்கு அருகிலிருந்தே குப்பைகளை அகற்றுவது குறித்து அயலவரான மானுவல் மார்டினெஷ் (வயது 58) என்பவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்தே மானுவல் யோகராஜாவைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மானுவலைக் கைது செய்து விளக்கமறியலில் வைத்திருப்பதுடன் இச்சம்பவம் தொடர்பாக அவர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

நண்பர்கள், உறவினர்களால் யோகா என அழைக்கப்படும் யோகராஜா, 1980 ல் தமிழ் அகதியாக கனடாவுக்குள் தஞ்சம் புகுந்திருந்து ஒரு வன்முறைச் சம்பவத்தின் மூலம் மரணமடைந்துள்ளார்.

இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக இலங்கையிலிருந்து தமிழர்கள் வெளியேறுகின்றனர். ஆனால் யோகராஜா வன்முறை மூலம் மரணித்திருப்பது கவலையான விடயமென பாலேந்திரா கூறினார்.

 வடபகுதியில் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முடிபுகள் வெளிப்படுத்திய அதிர்வலைகள் நீண்டதொரு வரலாற்றுச் சிறப்பம்சமாக அமைந்துவிட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை. ஏனெனில் யாருமே எதிர்பார்க்காத வகையில், தமிழ் மக்கள் தங்கள் தீர்ப்பினை வழங்கியிருந்தனர். யாருக்கு வாக்களிப்பது என்று அடுத்தவருக்கும் சொல்லாமல் வீட்டிலிருந்து வாக்களிப்பு நிலையம் – மை பூசுதல், வாக்களித்தல் – மெளனம் காத்தல் – மீளவும் வீடு திரும்புதல் – வழமைபோல் தம் வேலையில் ஈடுபடுதல் என்ற ஒழுங்கில் மிகவும் பெளவியமாக தமிழ் மக்கள் நடந்துகொண்டனர். தமிழ் மக்களிடம் இத்தகையதொரு ஒற்றுமையை, உத்வேகத்தை – உணர்வுபூர்வமான முடிவை உண்டுபண்ணிய பெருமை இந்த நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்இஷவையே சாரும். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்தவர் ஜனாதிபதி என்றால், ஜனாதிபதிக்கு அந்தச் சிந்தனையைத் தூண்டியது சனல் 4 என்று கூறலாம். இதற்குமேலாக வன்னிப் போரில் அரசு வெற்றியீட்டிய பின்னர், தமிழர்கள் தலையயடுக்காத வகையில் சில திட்டங்கள் ஜனாதிபதி தரப்பால் தீட்டப்பட்டது. அதில் இரு பிரதான கட்சிகள் மட்டுமே இருக்க முடியும் என்பது முக்கியமானதாகும். அதாவது இலங்கையில் இனத்தின் பெயரால் அரசியல் கட்சிகள் இயங்க முடியாது. அதேசமயம் சிறுபான்மை இனங்கள் தங்களுக்கென அரசியற்கட்சிகளைக் கொண்டிருக்க முடியாது. இரண்டு பிரதான கட்சிக்குள் இந்த நாட்டின் அனைத்து மக்களையும் உள்ளடக்குவதே அரசின் நோக்கமாக இருந்தது. தமிழ் மக்கள் எக்காலத்திலும் தங்கள் இனம் பற்றிச் சிந்திக்காமல் இருப்பதை உறுதிசெய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட திட்டம் நீதிமன்றத்தின் தலையீட்டால் நின்றுபோனது. எனினும் தமிழ் அரசியல் கட்சியான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியை தனித்துப் போட்டியிடாமல் தடுத்து, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவதற்கான ஏற்பாட்டை ஜனாதிபதி செய்திருந்தார். ஜனாதிபதியின் இந்தத் திட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் அரசியல் தரப்பாக இருப்பதை தடுப்பதாகும். எனினும் ஜனாதிபதியின் இச்சிந்தனை தோல்விக்குரியது என்பதை தேர்தல் முடிவுகள் அறுதியிட்டுக் கூறியுள்ளன. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது வீணைச் சின்னத்தில் தேர்தல் களத்தில் இறங்கியிருந்தால் தேர்தல் முடிவுகள் அதற்கும் இதற்குமாக இருந்திருக்கும். ஆனால் வெற்றிலைச் சின்னம் வீணை பற்றிய நினைப்பையே மறைத்துவிட்டது. ஆக, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தனது வீணைச்சின்னத்திலன்றி வெற்றிலைச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற ஜனாதிபதியின் முடிவும் வடபுலத்தில் அரச தரப்பிற்கு ஏற்பட்ட மாபெரும் தோல்விக்கு ஒருவகைக் காரணம் எனலாம். என்ன செய்வது? ஊழ்வினை வந்து உறுத்தும்போது மாரகச் சிந்தனைகளே வெளிப்படும்.

நன்றி: வலம்புரி

அதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனுக்கு இனந்தெரியாத நபரொருவரால் தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு 9.30 அளிவில் தனக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட இனந்தெரியாத நபர் இரண்டு நாட்களில் நாட்டை விட்டுச் செல்லுமாறும் இல்லாவிடின் உயர் தண்டனையான மரண தண்டனை விதிக்கப்படும் எனவும் தொலைபேசியில் மிரட்டியதாகவும் ஈ.சரவணபவன் முன்னர் தெரிவித்தார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வில் அரசாங்கத்தையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் சாடி பேசியதன் விளைவோ இந்த அச்சுறுத்தல் என தான் சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அச்சுறுத்தல் தொடர்பில் பொலிஸ் உயரதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்துள்ளதாகவும் குறித்த தொலைபேசி இலக்கத்தையும் பொலிஸாருக்கு வழங்கியுள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடத்துவதாக அவர்கள் உறுதியளித்துள்ளதாகவும் ஈ.சரவணபவன் கூறினார்.

தெருவோரத்தில் நான் நேசித்த மக்கள். வல்வெட்டித்துறைக்கு அருகாமையிலிருந்த கம்பர்மலை கிராமத்தின் இன்னொரு மனிதனாக வாழ்ந்து வந்தேன். கொழும்பை பட்டும்படாமலும் சந்தித்துவிட்டு ஜேர்மனிய விமான நிலையத்தில் வந்திறங்கிய அகதிகளுள் நானும் ஒருவனானேன்.

ஒரு முகம்தெரியாத அகதியின் உயர்தர அங்கீகாரம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் (TRO) பொறுப்பாளனாக உயர்வதோ என பின்னாளில் பெருமிதம் கொண்டிருக்கிறேன்.

இன்றோ அகதியினதும் போராளியினதும் அர்த்தம் தெரியாமல் நெதர்லாந்துத் தெருக்களில் அங்கும் இங்குமாக சோகங்களைச் சுமந்தபடி அலைந்து கொண்டிருக்கிறேன்.

ஜேர்மனியில் சில காலங்களை தேசத்தின் நினைவுகளோடு கடத்திவிட்டு, 1984ல் எனது அடுத்த பயணத்தை நெதர்லாந்தை நோக்கி ஆரம்பிக்கின்றேன். அங்கே என்னை இன்னொருதடைவை அகதியாக அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்.

புலிகள் இயக்கத்தில் விமர்சனம் கொண்டவனாக இருந்தாலும் அவர்கள் போராடுகிறார்கள் என்பதால் தொடர்ச்சியான ஆதரவை, சாதாரண தமிழ் மகன் என்ற அடிப்படையில் வழங்கிவந்தேன்.

குறிப்பாகப் புலிகளின் இராணுவ வெற்றிகள் உருவாக்கியிருந்த மாயைக்குள் புலம்பெயர்நாடுகளில் வாழும் அனைவருமே கட்டுண்டிருந்த 30 வருடக்காலப்பகுதியில் விமர்சனங்களை ஒருபுறம் மூட்டை கட்டிவைத்துவிட்டு நானும் ஆதரவு வழங்க ஆரம்பிக்கிறேன். நானும் விமர்சனங்கள் இன்றிப் புலிகளின் ஆதரவாளனாகிறேன்.

1992 ஆம் ஆண்டிலிருந்து புலிகளுக்கு தொடர்ச்சியான நிதிப்பங்களிப்பை வழங்க ஆரம்பிக்கிறேன். வங்கியிலிருந்து எனது உழைப்பின் ஒரு பகுதியை வருடா வருடம் வழங்கிவருகிறேன். பின்னைய நாட்களில், இதே நிதிப்பங்களிப்பு அதிகரித்த தொகையாக மாதாமாதம் வங்கியிலிருந்து வழங்கி வருகிறோம். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நெதர்லாந்துக் கிளையில் 1992ம் ஆண்டு சாதாரண அங்கத்தவராக இணைந்து கொள்கிறேன். 1995 ஆம் ஆண்டு அதன் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறேன்.

1995 இலிருந்து 2002 வரைக்குமான ஏழு வருடங்கள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பொறுப்பாளராகச் செயற்பட்டேன். புனர்வாழ்வுக்கழகம் புலி சார்பு நிலையில் இயங்கி வந்தமை அனைவரும் அறிந்ததே. புலிகளும் புலி சார் அமைப்புக்களும் பணம் சேர்ப்பதையே பிரதான வேலையாகக் கொண்டிருந்தன. ஆக, எனது பணியும் தமிழர்களிடம் பணம் சேகரிப்பதும் அதனை ஒங்குபடுத்துவதுமாகவே அமைந்திருந்தது.

புனர்வாழ்வுக் கழகத்தின் பொறுப்பாளராக இருந்த போது மகேஸ்வரன், திலகர் போன்ற முக்கிய உறுப்பினர்களைச் சந்தித்திருக்கிறேன். நான் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்குப் பொறுப்பாளராகச் செயற்பட்ட காலத்தில் புலேந்திரன் என்பவர் தான் பொருளாளராகச் செயற்பட்டார்.

சேர்க்கும் பணத்தை இலங்கைக்கு அனுப்பி வந்தார். பணம் புலிகளிடமே முதலில் சென்றடைந்தது.

இது குறித்து எனக்கும் இளவரசனுக்கும் இடையே முரண்பாடுகள் உருவாகின்றன. நாம் ஒரு சட்டரீதியான அமைப்பு புலிகள் அவ்வாறில்லை என்பதால் சட்டப்பிரச்சனைகள் உருவாகும் எனக் கூறினேன் .

தவிர, சட்ட ரீதியாகப் பணத்தின் செலவீனங்களைக் காட்டுவதற்கு எமக்கு எந்த வழிமுறையும் இருக்கவில்லை. இதற்கு பொருளாளரிடமிருந்தோ அன்றி புனர் வாழ்வுக் கழகத்தின் தலைமையிடமிருந்தோ குறிப்பான எந்தப் பதிலும் கிடைக்காமையினால் 1997 ஆம் ஆண்டு புனர்வாழ்வுக் கழகத்திலிருந்து நான் வெளியேறிக் கொள்கிறேன்.

அதன் பின்னர் இப்போது 136 மில்லியன் யூரோ பரிமாற்ற ௧ணக்கில் பிடிக்கப்பட்டிருக்கும் ராமச்சந்திரன் மற்றும் நோர்வேயிலிருந்து சர்வே ஆகியோர் என்னை வந்து சந்திக்கின்றனர்.

இவர்கள் காலப்போக்கில் புனர்வாழ்வுக் கழகத்தை ஒரு ஒழுங்கிற்குக் கொண்டு வருவோம் என்றும் மீண்டும் இணைந்து செயற்படுமாறும் கேட்கின்றனர். ராமச்சந்திரனை எனக்குத் தனிப்பட்ட வகையில் தெரிவும் என்பதாலும் அவர்கள் வற்புறுத்தியதாலும் நான் மீண்டும் பொறுப்பாளராக செயலாற்ற ஒத்துக்கொள்கிறேன்.

ராமச்சந்திரன் புலிகளின் சட்ட ரீதியான அமைப்பான தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நெதர்லாந்து அமைப்பின் பொறுப்பாளராகச் செயற்பட்டவர். எனக்கு நெதர்லாந்து முழுவதும் பரவலான தொடர்புகள் இருந்ததால், நாம் தீவிரமான நிதி சேகரிப்பில் ஈடுபட்டோம். அதன் விளைவாக நெதர்லாந்துக் கிளை உற்சாகத்துடன் செயற்பட்டது.

என்னுடைய தொடர்புகளூடாக நிதி சேகரித்தாலும் எம்மத்தியிலிருந்த பல இளைஞர்கள் தீவிர மாக இயங்கி உற்சாகமக தொழிற்பட்டனர். 2002ம் ஆண்டு மிகவும் தீவிரமாகவும் நேர்மையோடும் செயற்பட்ட புலேந்திரன் என்பவரை பொறுப்பாக நியமிக்குமாறு நானே முன்மொழிகிறேன். எனது தொடர்புகள், நம்பிக்கைக்கு உரியவர்கள் அனைவரும் இப்போது பணம் கொடுக்க ஆரம்பித்திருந்ததால் புலேந்திரன் தலைமைவகிப்பது பொருத்தமானதாக இருக்கும் என்ற அடிப்படையில் நான் அதிலிருந்து விலகிக் கொள்கிறேன். புலேந்திரன் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

அதற்கு பின்னரும் நான் மாதம் தோறும் புலிகளிற்குப் பணம் கொடுப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல் புலிகளுக்கும் தமிழர் புனர் வாழ்வுக்கழகத்திற்கும் ஆதரவு நிலையிலிருந்து வேலை செய்தேன். இந்த ஆதரவு நிலை 2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தங்கள் நிகழும் வரை தொடர்கிறது.

சுனாமிக் காலகட்டத்தில் மிகப் பெருந்தொகையான பணம் நெதர்லாந்தில் மட்டுமல்ல ஐரோப்பா முழுவதும் சேகரிக்கப்படுகிறது. நெதர்லாந்தில் திரட்டப்பட்ட பணத்தோடு ஒப்பு நோக்கும் போது மொத்தப் பணமும் மக்களுக்குச் சென்றடைந்திருந்தால் பாதிக்கப்பட்ட அனைவரும் குறைந்தது பத்து வருடங்களுக்கு அடிப்படை வசதிகளுக்கும் அதிகமாக பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கலாம்.

ஆனால், நடந்ததோ வேறு. முதலில் தொலைக் காட்சிகளில் மக்களிடம் பணம் கோரப்பட்டு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வங்குக் கணக்கு இலக்கங்கள் தான் கொடுக்கப்பட்டன. அந்த வங்கிக்கணக்கிற்கே பணம் வழங்குமாறு மக்கள் கோரப்பட்டனர். பின்னதாக அவை மாற்றப்பட்டு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்ற பெயரில் புலிகள் அமைப்பின் வங்கி இலக்கம் கொடுக்கப்பட்டது. பணம் அதிகமாக வழங்கப்படுகிறது என்று தெரிந்ததும் வங்கி இலக்கம் மாற்றப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களின் பெயரில் புலிகளுக்காக பணம் சேர்க்கப்பட்டது.

அவ்வேளையில் தமிழர் புனர் வாழ்வுக் கழகத்திற்குப் பொறுப்பாக நான் இல்லை. புலேந்திரன் தான் பொறுப்பாக இருந்தார். அவர் கூட புலிகளுடன் தீவிரமாக முரண்படுகிறார். மக்களுக்காகத் திரட்டப்படும் பணம் மக்களுக்கே சென்றடைய வேண்டும் என்று புலிகளுடனும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைமையுடனும் பேசுகிறார். குறிப்பாக அச்சந்தர்ப்பதில் புனர் வாழ்வுக் கழகத்தின் தலைமையில் இருந்தவரும் இப்போது சர்ச்சைக்குரியவருமான ரெஜியுடன் புலேந்திரன் முரண்பட்டுப் பேசிய போதும் தீர்க்கமான எந்தப்பதிலும் வழங்கப்படவில்லை. இருப்பினும் அவர் தொடர்ந்தும் புனர்வாழ்வுக் கழகத்துடன் செயற்படுகிறார்.

புலம் பெயர் நாடுகளிலிருந்து செல்லும் பணம் தொடர்பாகப் புலிகளுடன் தெளிவான வரையறைகள் இல்லாமையினாலும் உறுதியான பதில் கிடைக்காமையினாலும் புலேந்திரன் சில காலங்களின் பின்னர் புனர் வாழ்வுக் கழகப் பொறுப்புகளிலிருந்து விலகிக் கொள்கிறார்.

எனக்குத் தீவிரமான முரண்பாடு ஏற்படுகிறது. செயற்பாடுகளைக் குறைத்துக் கொள்கிறேன். ஆதரவு நிலைப்பாட்டையும் குறைத்துக் கொள்கிறேன்.

2005ம் ஆண்டளவில் புலிகளின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்குப் பொறுப்பாகவிருந்த இளவரசன் எனது வீட்டிற்கு வருகிறார். சில மாதங்களின் முன்பதாக அவர் நெதர்லாந்து பாதுகாப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருந்தார். இப்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரோடு இன்னும் நான்கு பேர் எனது வீட்டிற்கு வந்தனர். அவர்கள் அனைவருமே எனக்கு நன்கு தெரிந்தவர்கள். அது 2005ம் ஆண்டின் மத்திய பகுதி. அவர்கள் நான் இனிமேல் வங்கியிலிருந்து பணம் அனுப்பத் தேவையில்லை ஆனால் இறுதி நிதி ஒன்றை மக்களிடமிருந்து திரட்டுகிறோம். இனிமேல் மேலதிகமாகப் பணம் கோரமாட்டோம் அதற்கு உதவிபுரியுமாறு கோருகின்றனர். அவர்கள் நான்காயிரம் யூரோக்களை என்னிடம் கோரினர். என்னிடம் இதுவரை அவ்வளவு பணம் இருந்ததில்லை. போராட்டத்திற்கான பணம் என்பதால் வங்கிகளிடம் கடன் வாங்கி மிகுந்த சிரமத்தின் மத்தியில் பணத்தை வழங்குகிறேன்.

தவிர, அந்ததப் பணம் குறித்த வட்டியுடன் 2008ம் ஆண்டு திருப்பித் தரப்படும் என்று அப்போது கூறியதுடன் அதற்குரிய பற்றுச்சீட்டும் வழங்கியிருந்தார்கள். அவர்கள் திருப்பித் தருவது தொடர்பாகக் கூறியவை தெளிவற்றவையாக இருந்தன. எது எவ்வாறாயினும் நீங்கள் எப்படி பணத்தைத் திருப்பித் தரமுடியும் எனக் கேட்டபோது, சேகரிக்கப்படும் பணத்தை பரவலாக முதலீடு செய்து அந்த முதலீட்டில் கிடைக்கும் பணத்திலிருந்து திருப்பிக் கொடுப்பதான திட்டம் இருப்பதாகக் கூறினர்.

2007ம் ஆண்டில் பெயர் குறிப்பிட விரும்பாத புலிகளின் பொறுப்பாளர் ஒருவரை விருந்து வைபவம் ஒன்றில் சந்திக்கிறேன். நெதர்லாந்தில் புலிகள் அமைப்பை உருவக்குவதில் முதன்மையான பங்கு அவரது தான். பிரபாகரன் உட்பட புலிகளின் தலைமையைப் பல தடவை அவர் சந்தித்திருக்கிறார். என்னோடு நம்பிக்கை கொண்ட அவர் சில தகவல்களைக் கூறுகிறார். பிரபாகரன் உள்ளவரை தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வோ அன்றி தமிழீழமோ கிடைக்கப்போவதில்லை என்கிறார். அதற்கான இரண்டு முக்கிய காரணங்களை அவர் கூறுகிறார்.

இவ்வாறான சம்பவங்களை வெளிப்படையாகச் சொன்னால் தமிழ்ச் சமூகம் தங்களைத் துரோகிகளாக முத்திரையிட்டுவிடும் என பய உணர்வைக் கொண்டிருந்தனர் என்பதால் இவர்கள் மௌனம் சாதித்துக் கொண்டார்கள் என்றே எண்ணுகிறேன்.

நான் மதிப்பு வைத்திருந்த புலிகள் இயக்கத்திலிருந்து இந்தத் தகவல் வெளியாவது எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. இப்போது எண்ணிப் பார்க்கிறேன். கே.பி போன்ற காட்டிக்கொடுப்பாளர்களை உருவாக்கியது இவ்வாறான விமர்சனமற்ற ஒத்துப் போகும் சிந்தனைகள் தான்.

இது தவிர, நெதர்லாந்தில் வசிக்கும் எனது நண்பரும் புலி ஆதரவாளருமான மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஒருவர் புலிகளை வன்னியில் சென்று சந்தித்துவிட்டுத் திரும்புகிறார். நெதர்லாந்து திரும்பியதும் இவர் என்னைச் சந்திக்கிறார். புலிகளை வன்னியில் சென்று சந்தித்த அவர் வன்னி சென்றதும் மனித உரிமைகள் குறித்துப் பேசுவதற்கு கிளிநொச்சிப் பாடசாலை ஒன்றிற்கு அழைக்கப்பட்டார். அங்கு அவர் சென்று நீண்ட கூட்டம் ஒன்றை நடத்துகிறார். அங்கு “நீங்கள் அனைவரையும் கேள்வி கேட்க வேண்டும். உங்களது மனித உரிமைக்காக நீங்களே போராட வேண்டும்” எனத் தனது உரையில் மக்களை நோக்கிக் கூறியிருக்கிறார்.

அவர் வெளியே வந்ததும் புலிகள் இயக்கத்தினர் இப்படியெல்லாம் இங்கு பேச வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறார்கள். இவ்வாறு பேசினால் மக்கள் எமக்கு எதிராகவும் திரும்பக் கூடும் என புலிகள் சொல்லியிருக்கிறார்கள். இங்கிருந்து சென்றவருக்கு ஏமாற்றம் மட்டுமே எஞ்சியது.

இதற்கு எதிராக அவர் கேள்வியெழுப்ப முற்பட்ட போது, புலிகளின் பொறுப்பாளர்கள் , குறித்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் அங்கிருந்தால் தமக்குப் பிரச்சனை ஏற்படும் எனவும் அவரைத் திருப்பி அனுப்பி விடுமாறும் உத்தரவு போட்டிருக்கிறார்கள். இவ்வாறு ஏராளமான சம்பவங்களை அவர் எனக்குக் கூறினார். இவை அனைத்தும் புலிகளின் தலைமை உண்மையாகவே விடுதலைக்காகப் போராடவில்லை என்பதை உணர்த்தின.

இதன் காரணமாக நான் வழங்கிய பணத்தினூடாகப் போர்க்குரல் எழுப்புவதாகத் தீர்மானித்தேன். அதே வேளை வன்னிப் போரில் புலிகள் மக்களை வெளியேற விடாமல் தடுத்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகத் தொடங்கின. 2006 இலிருந்து புலிகளுக்கு வேலை செய்வதை முற்றாக நிறுத்தியிருந்த நான், அவர்களின் எந்தச் செயற்பாட்டிலும் பங்கேற்கவில்லை.

இதனால் 2008ம் ஆண்டு எனக்குத் திருப்பித் தருவதாக வாக்களிக்கப்பட்ட பணத்தை நெதர்லாந்து பொறுப்பளரிடம் சென்று திருப்பித் தருமாறு கேட்டேன். அது குறித்து எந்த தீர்க்கமான முடிவையும் அவர்கள் கூறவில்லை. வன்னியில் மக்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்ததால் நான் மேலதிகமாக எதுவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்போது கருதவில்லை.
2009 மே மாதம் புலிகள் அழிக்கப்பட்டனர். அப்போது மறுபடி இளவரசனைத் தொடர்புகொண்டு பணத்தைத் தருமாறு கேட்கிறேன். உடனே அவர் எனது வீட்டிற்கு வந்து என்னோடு பேசுகிறார். பணம் சேகரிக்க வந்த ஏனையோரையும் தொடர்புகொள்கிறேன். நான் பணம் எங்கே என்று கேட்ட போது, அவர் அதனைப் பெற்றுக்கொண்டவர்கள் திருப்பித் தரவில்லை என்கிறார்.

என்னைப் பொறுத்த வரை அவரிடம் பணம் இல்லை என்பதை நான் இப்போதும் நம்புகிறேன்..

நீண்ட விவாதங்களின் பின்னதாக நான் ஒன்றை முன்மொழிகிறேன்.
“நானும் இளவரசனும் ஒரு அறிக்கை தயாரித்து பொது மக்களுக்கு வெளியிடுவதாகவும், அந்த அறிக்கையில் நெதர்லாந்திலிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்ட சிலர் திருப்பித் தராமல் ஏமாற்றி விட்டார்கள் என்ற உண்மையைச் கூறுவோம் என்றும் சொல்கிறேன்.”
அவ்வாறான ஒரு அறிக்கை வெளியிடப்பட்டால் எனக்குப் பணம் அவசியமில்லை. மக்கள் உண்மையை உணர்ந்து கொள்வார்கள் என்றும் கூறுகிறேன்.

உடனடியாக எனது முன்மொழிவுகள் தொடர்பாக ஏதும் கூறாத அவர். சில காலங்களின் பின்னர் அப்படி ஒரு அறிக்கையை நாங்கள் வெளியிட முடியாது என்று என்னிடம் கூறுகிறார்.

அதற்குப் பதிலாக , 2010இல் பணத்தைத் திருப்பித் தருவதற்கான வேலைகளைச் செய்வதாக கூறினார். அதற்குச் சம்மதம் தெரிவித்த நான், அவரையும் அவரது மனைவியையும் கையொப்பமிட்டு பணம் தருவதாக உறுதிப்பத்திரம் ஒன்றைத் தயாரித்துத் தருமாறு கேட்டேன். அதற்கும் அவர் மறுத்துவிட்டார்.

இவை எனக்கு பணம் குறித்த பலத்த சந்தேகங்களைத் தோற்றுவித்தது. உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதிலும் மக்கள் பணம் மக்களுக்கே சென்றடைய வேண்டும் என்பதிலும் நான் உறுதியாக இருந்தேன்.

2010 ஆரம்பத்தில் நான் நெதர்லாந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்கிறேன். வழக்கு முடிவு இரண்டு நாட்களுக்கு முன்னர் (30.05.2011) தான் எனக்குக் கிடத்தது. இளவரசன் எனக்குப் பணம் வழங்கவேண்டும் என்றே முடிவாகியிருக்கிறது. அவர் பணத்தைத் திருப்பித் தருவார், பணம் தான் பிரதானமானது என்பதை எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் பணம் மக்களுக்கே சேர வேண்டும் என்பது குறித்து நான் தொடுத்த போராட்டம் வெற்றியடைந்திருக்கிறது என்பதே முக்கியமானது.

என் போன்ற பலரின் முயற்சி இளவரசன் போன்ற இடை நிலை செயற்பாட்டாளர்களையும் தாண்டி இதன் சூத்திரதாரிகளான நெடியவன் போன்றோர் வரை சென்றடைந்திருக்கிறது.

இவை அனைத்திற்கும் அப்பால் போராட்டம் என்ற பெயரில் அபகரிக்கப்பட்ட மில்லியன் கணக்கான பணம் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும். இல்லையேல் உரியவர்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும்.

மக்கள் பணத்தோடு தொடர்புடைய ஒவ்வொருவரும், அது எந்த வடிவத்தில் திரட்டப்பட்டதாயினும் அதனை மக்களுக்குக் கூற வேண்டிய காலம் இது. வெளிப்படைத் தன்மை குற்றவாளிகளைத் தண்டிப்பதோடு மட்டுமன்றி போராட்டத்தையும் செழுமை செய்யும்.

நன்றி: தமிழ்நியூஸ்வெப்

 

 

பலரையும் மிரட்டிப் பணம் பறிப்பதே நடிகை விஜயலட்சுமியின் தொழில். சமீபத்தில்கூட ஒரு தயாரிப்பாளரை மிரட்டி ரூ. 5 லட்சம் பணம் பறித்துள்ளார் அவர். அவரை யாரோ சிலர் பின்னாலிருந்து இயக்குகிறார்கள். அவருக்கு யாருடன் எல்லாம் தொடர்பு உள்ளது என்று திரையுலகில் அனைவருக்கும் தெரியும் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் இயக்கத் தலைவரான இயக்குநர் சீமான்.

சீமான் மீது நடிகை விஜயலட்சுமி சுமத்தியுள்ள பரபரப்பான குற்றச்சாட்டுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் விஜயலட்சுமியின் முந்தைய செயல்பாடுகள் குறித்து அறிந்தவர்களுக்கு இது அதிர்ச்சியை அளிக்கவில்லை.

ஏற்கனவே கன்னட நடிகர் ஒருவருடன் 3 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வருவதாக கூறியவர் விஜயலட்சுமி. ஆனால் அந்த வாழ்க்கையை பின்னர் உதறி விட்டு வந்தார்.

சன் டிவியில் ஒளிபரப்பான நடிகை ராதிகாவின் தங்க வேட்டை நிகழ்ச்சியில் நடித்தபோது அதன் இயக்குநர் மீது சரமாரியான புகார்களைக் கூறியவர். அதில் உணமை இல்லை என்று பின்னர் தெரிய வந்தது. பின்னர் தற்கொலைக்கு முயன்று பரபரப்பை ஏற்படுத்தினார். இப்படி அடிக்கடி சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்த அவர் தற்போது சீமான் மீது குற்றம் சாட்டி புகார் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில்ஒரு தயாரிப்பாளரை மிரட்டி ரூ. 5 லட்சம் பணம் பறித்தார் விஜயலட்சுமி என்று சீமான் தெரிவித்துள்ளார்.

பார்த்தே ஒன்றரை வருடமாகிறது

இதுகுறித்து அவர் கூறுகையில்,

விஜயலட்சுமியை நான் நேரில் பார்த்து பேசியே ஒன்றரை வருடம் ஆகிறது. வாழ்த்துகள் படத்தில் நடித்தபோது கூட நான் அவருடன் அதிகம் பேசிக் கொள்ளவில்லை.

பணம் கேட்டு மிரட்டி நான் பணியாததால் என் மீது புகார் கொடுத்துள்ளார். அவரை யாரோ பின்னணியில் இருந்து இயக்குகிறார்கள். மிரட்டி பணம் பறிப்பது விஜயலட்சுமிக்கு வாடிக்கையான ஒன்றாகி விட்டது.

தயாரிப்பு நிர்வாகி ஒருவர் கூட சமீபத்தில் ரூ.5 லட்சத்தை இழந்துள்ளார். அவரை மிரட்டி பணம் வாங்கியுள்ளார்.

விஜயலட்சுமி யார் யாருடன் பழகி உள்ளார் என்பது ஊரறிந்த விஷயம். அரசியலில் எனக்கு இருக்கும் புகழை கெடுக்க திட்டமிட்டு நடத்தப்படும் இந்த சதித்திட்டத்தால் என்னை வீழ்த்தி விட முடியாது என்றார் சீமான்.

 
காற்று எப்பொழுதும் ஒரே திசையில் வீசுவதில்லை.அது பருவநிலை மாறும்போது எதிர்த்திசையில் வீசவே செய்யும்.சிலவேளைகளில் பலத்த காற்றாகி சேதங்கள் விளைவிக்கவும் கூடும்.இன்னும் சில தருணங்களில் கடும் புயலாகி அழிவுகளையும் ஏற்படுத்தும்.அவ்வேளையில் அவற்றுக்கு முகம் கொடுப்பது மனிதர்களுக்கு கடுமையானதாக ஆகிவிடும்.இந்நிலை நாட்டின் அரசியல் அரங்கிற்கும் பொருத்தமானதாகும்.

அண்மைய வாரங்களில் அரசாங்கத்தை விரல் சுட்டி விமர்சிப்பதும் எதிர்த்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதுமான போக்குகள் முனைப்படைந்து காணப்படுகிறது.சர்வதேச நிலையில் ஐ.நா.பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்ட இலங்கையின் போர்க்குற்றச் சம்பவங்களுக்கான நிபுணர்குழுவின் அறிக்கை அரசாங்கத்தை விரல் சுட்டி நிற்கிறது.அதற்கு அரசாங்கம் பதில் கூறப் போவதில்லை என்று கூறியபோதிலும் பதில் கூற வேண்டிய புறச் சூழலே காணப்படுகிறது.மேற்படி நிபுணர் குழு முன்வைத்த அறிக்கை பற்றி ஐ.நா.செயலாளர் அடுத்த கட்ட நகர்வாக எதனைச் செய்யப் போகிறார் என்பது இன்னமும் தெரிவில்லை.அவரும் ஐ.நா.சபையும் உலக நாடுகள் முழுவதற்கும் “நடுநிலையான’ “பொதுவான’ “நியாயமான’ போக்குகளைக் கடைப்பிடிப்பவர்கள் அல்லர்.ஐ.நா.விற்குப் பின்னால் அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் ஆட்டிப்படைப்போராக இருந்து வருகிறார்கள் என்பது இரகசியமல்ல.எனவே நிபுணர்குழு அறிக்கையின் கீழான அடுத்த நடவடிக்கை வெள்ளை மாளிகையின் முடிவிலேயே தங்கி உள்ளது.

ஆனால் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளும் குற்றச்சாட்டுகளும் அண்மைய நாட்களில் ஜெனீவாவில் இடம்பெற்ற ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் பதினேளாவது அமர்வில் எதிரொலித்தன.அதன் உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை தனது வருடாந்த அறிக்கையில் அதனைச் சுட்டிக்காட்டி இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணை வேண்டுமென வற்புறுத்தியிருந்தார்.அதற்கு பதில் கூறவேண்டிய கடப்பாட்டைப் புறந்தள்ள முடியாத அரசாங்கம் இரண்டு அமைச்சர்கள், சட்டமா அதிபர் ஆகியோரை அங்கு அனுப்பி வைத்தது.அமைச்சர் சமரசிங்கவும் சட்டமா அதிபர் மோஹான் பீரிஸும் இலங்கை அரசாங்கத்தில் போர்க்குற்றச் செயல்கள் இழைக்கப்படவில்லையென அடித்துக் கூறினர்.அரசாங்கம் முன்னெடுத்த மனிதாபிமான நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுக் காட்டினர்.எவ்வாறாயினும் இலங்கை அரசாங்கம் மீதான நிபுணர் குழுவின் அறிக்கையானது குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எந்தெந்த வழிகளில் முன்னெடுக்கப்படுமோ என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ஐ.நா.நிபுணர்குழுவின் அறிக்கை மீது கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் மகிந்த சிந்தனை அரசாங்கம் அமெரிக்காவையும் மேற்கு நாடுகளையும் பெயர் குறிப்பிடாது நாட்டின் இறைமை மீது தலையீடு செய்ய முற்படும் தீய சக்திகள் எனச் சாடிவருகிறது.அதேவேளை அதே அமெரிக்க மேற்குலகத்தால் வழிநடத்தப்படும் உலக வங்கி,சர்வதேச நாணய நிதியம் என்பனவற்றின் முன்னால் பணிந்து நின்று அவர்களது ஆலோசனைப்படி நடந்து முழு நாட்டு மக்களினதும் இறைமையையும் அடகுவைத்து வருகிறது என்பது மறைப்பதற்குரிய ஒன்றல்ல.

நாட்டின் கல்விக் கொள்கையில் குறிப்பாக உயர்கல்விக் கொள்கையிலும் நடைமுறையிலும் படிப்படியான மாற்றியமைத்தல்கள் ஏற்படுத்துவதற்கு நிர்ப்பந்தம் செய்துவந்தது உலக வங்கியேயாகும்.நாட்டின் பொருளாதாரம் நவதாரள பொருளாதாரமாக முன்னெடுப்பதற்கு தனியார் மயமும் திறந்த சந்தையும் என்ற கொள்கை ஜே.ஆர்.ஆட்சிக்காலத்தில் பின்பற்றப்பட ஆரம்பித்தது.அதன் பின் சந்திரிகா அம்மையார் அவற்றுக்கு மனிதமுகம் அளிப்பதாகக் கூறிஅதே பாதையில் பயணித்தார்.அவருக்குப் பின் வந்த தொழிலாளர் சார்பானவர் எனத் தோற்றங்காட்டிய மகிந்த ராஜபக்ஷவும் பாதை மாறாது உலக மயமாதல் நுகர்வுப் பொருளாதாரத்தைப் பின்பற்றுகிறார்.அதற்கு ஒரு காலத்து இடதுசாரிகள் எனக் கூறப்பட்ட பாராளுமன்ற இடதுசாரிகள் உடுக்கடித்து உருவாடி ஆதரவுக்குறி சொல்பவர்களாகி நிற்கிறார்கள்.

இவ்வாறு ஏகாதிபத்திய நிறுவனமான சர்வதேச நாணய நிதியத்திடம் மிகப் பெரும் கடன் பெற்றுக்கொண்டு அவர்கள் விதித்த நிபந்தனைகளின் கீழாகவே தனியார் துறையினருக்கான ஓய்வூதியத்திட்டம் என்பது முன்வைக்கப்பட்டது.இலங்கையில் அறுபத்தைந்து இலட்சம் பேர் தனியார் துறைத்தொழிலாளர்களாக ஊழியர்களாக உள்ளனர்.இவர்களே நாட்டின் ஆகக் கூடிய தொழிற்படையினராகக் காணப்படுகின்றனர்.இவர்களின் சார்பாகவே சேமலாபநிதியம்,ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பன இருந்து வருகின்றன.அவற்றின் ஊடாகப் பலகோடி ரூபாய்கள் சேமிக்கப்படுகின்றன.அவற்றை நம்பியும் எதிர்பார்த்துமே ஒவ்வொரு தனியார் துறைத்தொழிலாளியும் ஊழியரும் இருந்து வருகின்றனர்.அந்நிதியப் பணம் என்பது அவர்களது வியர்வை சிந்திய உழைப்பின் ஊடாகச் சேமிக்கப்படுவதாகும்.அதில் கூட எத்தனையோ தில்லுமுல்லுகள் ஏமாற்றுகளை தொழில்தருவோர் செய்துகொள்கிறார்கள். அந்நிதியங்களுக்கு முறையாக நிதி செலுத்தாது ஏமாற்றுச் செய்யும் தொழில் தருவோர் கணிசமான அளவில் கள்ளத்தனமாக இருந்து வருகிறார்கள். தொழிலாளர்கள் ஊழியர்களிடம் சம்பளத்தில் அவர்களுக்குரிய தொகையைக் கழித்துக் கொள்ளும் அதேவேளை தமது பங்கிற்குரிய தொகையைக் கட்டாது மொத்த மோசடி செய்யும் தொழில் தருவோர் திருடர்கள் போன்று நடந்து கொள்கிறார்கள். இவை அனைத்தையும் தாண்டியே மேற்படி நிதியங்களில் தொழிலாளர்கள் ஊழியர்களின் சேமிப்புகள் இருந்து வருகின்றன. இவற்றுக்கு உத்தேச ஓய்வூதியத் திட்டத்திற்கான சட்ட மூலம் உலை வைத்து விடும் அபாயம் தோன்றியிருப்பதையே தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அச்சட்டமூலத்தில் கூறப்பட்டுள்ள பல்வேறு அம்சங்களும் தொழிலாளர்கள் ஊழியர்களுக்கு பாதகமானவையும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைக்கும் ஆணைக்கும் பணிந்து கொண்டவைகளாகும்.

அதன் காரணமாகவே தனியார் துறையினருக்கான ஓய்வூதியச் சட்ட மூலத்தை தொழிற்சங்கங்களும் தொழிலாளர்கள், ஊழியர்களும் எதிர்க்க ஆரம்பித்தனர். அந்த எதிர்ப்பு இயக்கம் விரிவடைந்து வீதி ஆர்ப்பாட்டமாகியது. கடந்த மே தினத்திலிருந்து அவ் எதிர்ப்பு இயக்கம் பல நிலைகளிலும் வளர்ச்சி கண்டது. குறிப்பாகக் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழிலாளர்களின் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டது. இலங்கையில் நிறுவன ரீதியாகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அடுத்த நிலையில் கடுமையான சுரண்டலுக்கு உட்படுபவர்கள் சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்களாவர். பல்தேசிய நிறுவனங்களின் நேரடி உழைப்புச் சுரண்டலும் வியர்வை இரத்த உறிஞ்சல்களும் இங்கேதான் தாராளமாகவே நடைபெறுகின்றன. இதற்கு இலங்கையின் பௌத்த சிங்கள தர்மம் பேசும் அரசாங்கங்கள் முழு ஆதரவும் பாதுகாப்பும் வழங்கி வருகின்றன.
ஏற்கனவே நொந்து வெறுப்புற்று இருந்து வந்த சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்கள் ஊழியர்கள் மத்தியில் அரசாங்கம் கொண்டுவர முயன்ற ஓய்வூதியச் சட்ட மூலமானது வெந்த புண்ணில் வேல் பாச்சுவதாகவே அமைந்து கொண்டது. அதனால் தொழிலாளர்களின் நியாயமான எதிர்ப்புக்கு தொழிற்சங்கங்கள் தலைமை தாங்கின. தொழிற்சங்கங்கள் என்பன தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கும் அவர்களின் நலன்களுக்கும் உரியனவே அன்றி அரசாங்கம் கொண்டுவரும் மக்கள் விரோத தொழிலாளர் விரோதச் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அல்ல சுதந்திர வர்த்தக வலயத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஏனைய தொழிலாளர்களுக்குரிய தொழிற்சங்க உரிமைகள் கிடையாது. அதனாலேயே அவர்கள் தமக்கான சங்கங்களை உருவாக்கி தமது உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியுள்ளது.
அந்நிய பல்தேசிய நிறுவனங்களின் தாராள சுரண்டலுக்கு வழி வகுத்தவரே ஜே.ஆர்.தான். அவரது 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பில் அதற்கான வரையறைகளைச் சேர்த்தும் கொண்டார்.
அவ்வாறு இருந்தும் சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்கள், ஊழியர்கள் இளம் பெண்களாகவும் இளைஞர்களாகவும் தத்தமது தொழிற்சங்கங்களின் ஊடாக ஐக்கியப்பட்டு தமது எதிர்ப்பை ஓய்வூதியச் சட்டத்திற்கு எதிராகத் தெரிவித்தனர். தொழில் அமைச்சரை அங்கு இடம்பெற்ற சந்திப்பில் பல கேள்விகள் கேட்டனர். பதில் கூற முடியாது திக்குமுக்காடிய அமைச்சர் மௌனம் சாதிக்க வேண்டியதாயிற்று. அதன் பின்னர் பல்வேறு தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் சட்டத்திற்கு உட்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையே மேற்கொண்டனர்.
அவர்கள் மத்தியிலிருந்து எதிர்த் திசைக்காற்று பலமாகவே வீச ஆரம்பித்தது. அதற்கு ஒரு பாடம் படிப்பிக்க அரசாங்கம் தீர்மானித்ததன் விளைவே கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற தாக்குதலும் மோதலுமாகும்,பொலிஸ் நடத்திய தாக்குதலை மிருகத்தனமானது எனக் கூறுவதில் தவறில்லை. சில காட்சி ஊடகங்கள் தாக்குதல் நடந்ததை அப்படியே காட்டியிருந்தன. ஒரு 22 வயது இளம் ஊழியர் கொல்லப்பட்டார்.
பொலிஸ் துப்பாக்கிச் சூட்டினாலேயே அவரது உயிர் பறிக்கப்பட்டது. பல்லாயிரம் தமிழ் மக்களின் உயிர்களைப் பறித்த துப்பாக்கிகள் இப்போது சிங்கள மக்கள் மத்தியில் தொழிலாளர்களின் உயிர்களைக் குடிக்க ஆரம்பித்துள்ளன. அதன் அண்மைக்கால முதல் களப்பலியே ரொசான் சானக என்ற 22 வயதுடைய வர்த்தக வலய ஊழியராவார். பல ஊழியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அமைதியான சட்டபூர்வமான தமது எதிர்ப்பை ஆர்ப்பாட்டத்தின் மூலம் தெரிவித்த ஊழியர்கள் மீது திட்டமிட்ட பழிவாங்கல் போன்றே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றே நம்ப வேண்டியுள்ளது. அதனை உறுதிப்படுத்துவது போன்றே ஜனாதிபதியின் உத்தரவுகளும் விசாரணை ஏற்பாடுகளும் செய்யப்பட்டன., அந்நிய மூலதன சக்திகளுக்கும் அவர்களது நலன்களுக்கான நிறுவனங்களினதும் ஆலோசனை வழிகாட்டலில் நடந்துகொள்ளும் எந்தவொரு அரசாங்கமும் இத்தகைய நெருக்கடிகளையே எதிர்கொள்ளும்.
தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளை மறுத்து அதனைப் பயங்கரவாதம் என்ற பெயரில் அடக்கியொடுக்கி வந்த பௌத்த சிங்கள முகமூடியணிந்த ஒரு அரசாங்கம் இன்று அதே பௌத்த சிங்கள மக்களுக்கு எதிராகத் துப்பாக்கி நீட்டி நிற்பது எவ்வகையிலும் விந்தை அல்ல. இது முதற்தடவையும் அல்ல. 1971 இலும் 198889 காலப்பகுதியிலும் பல்லாயிரம் சிங்கள இளைஞர்,யுவதிகள்,மக்கள் என்போர் இதே ஆளும் வர்க்கத் துப்பாக்கிகளுக்குப் பலியாகினர். அது பழைய கதையாகிவிட்டாலும் அதில் பொதிந்து காணப்பட்ட ஆளும் வர்க்க, ஆளப்படும் வர்க்கம் என்ற அடிப்படை உண்மையை மீண்டும் மீண்டும் துலக்கமுறவே செய்கிறது. வடக்கு,கிழக்கிலே இன ஒடுக்குமுறைச் சங்காரம் தாராளமாகவே நடந்து கொண்டது. அதனைக் காட்டியே ஆட்சி அதிகாரம் பெற்றோர் இப்போது சிங்கள உழைக்கும் மக்களுக்கு எதிரான வர்க்க ஒடுக்குமுறை சங்காரத்திற்குத் தயாராகிவிட்டனர். அதன் முதல் வெளிப்பாட்டினை கடந்த திங்கட்கிழமை மே 30 ஆம் திகதி கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் காணமுடிந்தது.

அச்சம்பவத்தில் சிங்கள உழைக்கும் வர்க்கம் அதிர்ச்சியிலும் ஆத்திரத்திலுமே உள்ளது. இதனை வலியும் வேதனையும் கொண்டு வாழும் தமிழ் மக்கள் குறுகிய பார்வையூடாக பழி என்ற கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது.  அனுதாபத்துடனும் ஒருமைப்பாட்டுடனும் அணுக வேண்டும். இன ஒடுக்குமுறையும் வர்க்க ஒடுக்குமுறையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருந்து வருவதே உண்மையானதாகும். இந்த உண்மையைத் தமிழ்,சிங்கள உழைக்கும் வர்க்கம் உணரும்போதே இலங்கையின் ஏகப்பெரும்பான்மையான மக்களுக்கு விமோசனம் கிடைக்க முடியும்.
அதற்குப் பட்டறிவின் மூலமான மாற்றுச் சிந்தனையும் அதனூடான யதார்த்தபூர்வமான மாற்றுக் கொள்கையும் உருவாக வேண்டும்.

 குடாநாட்டில் பொது மக்களை படம் பிடித்து பதிவு செய்வது என்பது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும். நீதிமன்ற உத்தரவை மதித்து பதிவுசெய்யும் பணிகளை உடன் நிறுத்த வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் கிராம சேவையாளர்கள் ஊடாக பொலிஸார் குடும்பப் பதிவு களை பரவலாக மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக மாவை விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இராணுவத் தரப்பினரோ, காவல்துறையினரோ தாம் விரும்பியவாறு பொது மக்களை குடும்பங்குடும்பமாக படம் பிடிப்பதும் பதிவுகளைப் பேணுவதும் சட்ட விரோதமான, தவறான அச்சுறுத்தல்மிக்க செயல் என்பதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயர்நீதி மன்றத்திலேயே அடிப்படை உரிமைமீறல் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

அந்த வழக்கின் தீர்ப்பின்படி ஆயுதப் படையினரின் இத்தகைய அத்துமீறிய செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்தன. அவ்வப்போது இராணுவத்தரப்பின் பொறுப்பதிகாரிகளும் அவ்வாறு தம்தரப்பினர் படம்பிடித்துப் பதிவுகள் செய்ய உத்தரவிடவில்லை என்று கூறி வந்துள்ளனர்.

தற்போது மீண்டும் பொதுமக்கள் படம்பிடிக்கப்பட்டு, படைத்தரப்பினரால், காவல்துறையினரால் பதிவு செய்யப்படுகின்றனர் என்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அது உண்மையாயின் இந்தச் செயலானது சட்ட விரோதமானதும், உயர் நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயலும் ஆகும். இராணுவத் தரப்புக்கோ, காவல்துறைக்கோ இத்தகைய கடமைப்பாடு ஒன்றுமில்லை. இந்தச் செயல்களினால் பொதுமக்கள் அச்சதிற்கும் பீதிக்கும் அடக்குமுறைக்கும் ஆளாகின்றனர்.

இத்தகைய அத்துமீறல் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் உடனுக்குடன் தகவல் தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

நாம் மீண்டும் உயர்நீதிமன்றதை அணுகி ஏற்கனவே வழங்கியுள்ள தீர்ப்புக்கு மாறாகப் பொது மக்களைத் துன்புறுத்தும் செயல்களில் ஈடுபவோரைக் கட்டுப்படுத்தவும் அத்தகையவர்களுக்கெதிராக நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவும் கோருவோம் என்றுள்ளது.

எனது குடும்பத்துக்கும் எனது உயிருக்கும் ஆபத்து ஏற்படுமானால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியும், பாதுகாப்பு செயலாளரும் மற்றும் என்னை கைது செய்ய உடந்தையாக இருந்த அனைவருமே பொறுப்பேற்க வேண்டுமென சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று வெள்ளைக்கொடி வழக்கில் சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் சாட்சியமளிக்கையில் :-

உலக தீவிரவாத அமைப்பினரான தமிழீழ விடுதலைப் புலி அமைப்பினரை மூன்று வருடத்துக்குள் ஒழித்துக்கட்டுவேன் என நான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றினேன்.இதற்கு எனக்கு ஒத்துழைத்த அனைத்து இராணுவத்தினருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்துடன் யுத்தத்தின் போது உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் சிறந்த இராணுவ தளபதியாக நான் வர்ணிக்கப்பட்டேன். ஆனால் எனது ஓய்வூதியம் உட்பட அனைத்தும் சூழ்சமமான முறையில் நீக்கப்பட்டு தற்போது ஒரு சிறைக் கைதியாக நிற்கின்றேன்.

இந்த துரதிஷ்டமான நேரத்தில் என் நாட்டு மக்களுக்கு நான் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் எனக்காக கஷ்டப்பட்ட சட்டத்தரணிகள், உற்றார் உறவினர், நாட்டு மக்கள், ஆதரவாளர்கள் மற்றும் சாட்சியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவிக்கின்றேன்.

தற்போது எனது வாழ்வுக்கு மரண அச்சுறுத்தல்கள் உள்ளதாக நம்பத்தகு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை எனது குடும்பத்தாருக்கு உயிரச்சுறுத்தல் ஏற்படுத்தும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

உதாரணமாக சிவனொளிபாத மலைக்கு வழிபாடுகளுக்காக என குடும்பத்தார் சென்ற போது பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட அதிகாரிகளிடம் பாதுகாப்பு வழங்குவதற்கான எதுவித ஆயுதங்களும் இருக்கவில்லை.

இதன்மூலம் அரசு எனது குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிப்பதாக போலியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதனடிப்படையில் எனது முழுக்குடும்பத்திற்குமே மரண அச்சுறுத்தல் உண்டு.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் எனது மகளின் கணவர் கைது செய்யப்பட்டு அவரை கொலை செய்யதிட்டமிருந்ததாக எனக்கு அறியக்கிடைத்தது. இதனாலேயே அவர் தனது உயிரை பாதுகாத்துக் கொள்ள தலைமறைவாக வேண்டிய சந்தர்ப்பமும் ஏற்பட்டது.

நான் மூன்று தடவைகள் மரணவாசலுக்கு சென்று மீண்டு வந்துள்ளேன். இந்நிலையில் நாட்டின் நீதிக்கட்டமைப்பு நிலைநாட்டப்பட வேண்டும். இந்த நீதிமன்றில் எனக்கு வழங்கப்படவுள்ள தீர்ப்பு வரலாற்றில் முக்கிய இடம்பெறும் எனக்கூறிக்கொள்ள விரும்புகிறேன். என்றார்.

இந்நிலையில் வெள்ளைக் கொடி விவகார வழக்கானது நாளை காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உதுல் ப்ரேமரத்ன தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் 
 
 
 விடுதலைப்புலிகள் இயக்கத்துடனான யுத்தம் முடிவுற்று இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமானது, கடந்த இரண்டு வருடங்கள் பூராகவும் இடைக்கிடையே அந்த யுத்த வெற்றி மனப்பான்மையை மக்கள் மத்தியிலும் இராணுவத்தினர் மத்தியிலும் நிலை நிறுத்துவதற்காகப் பல விதமான விழாக்களை ஏற்பாடு செய்திருக்கிறது. அதனடிப்படையில் இன்றும் கூட அது போன்ற விழாக்கள் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கெனில் இன்றைய தினமானது ‘பலகாரம், பாற்சோறு சாப்பிட்டு’க் கொண்டாடப்பட வேண்டிய தினமென்பது உண்மை. ஏனெனில் ராஜபக்ஷ பரம்பரைக்குக் கிடைத்த ‘அதிர்ஷ்டம்’ இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிடைத்த அந்த யுத்த வெற்றியே. ராஜபக்ஷ குடும்பத்தின் கூட்டுச் சகோதர்கள் உள்ளிட்ட ஏழேழு பரம்பரைக்கும் வேண்டிய சொத்துக்களைப் பெற்றுத் தந்த ‘புதையல்’ அது. எனினும் அந் நிலை உருவானது ராஜபக்ஷ குழுவினருக்கு மட்டுமே.

உண்மையாகவே அரசாங்கமானது மக்களுக்காக இயங்கியிருந்தால் இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு யுத்தம் முடிவடைந்ததானது, இந் நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய எல்லா மக்களுக்கும் ஏதேனுமொரு வெற்றியையோ, சுதந்திரத்தையோ உருவாக்கக் கூடிய ஒன்றாக அமைந்திருக்கும். எனினும் கடந்த இரண்டு வருடங்களில் நிகழ்ந்தவை. அதன்படியல்ல. அரசாங்கத்தின் ஊடகக் கண்காட்சிகளில் இரு விழிகளும் மயங்காத எவர்க்கும், சற்றுக் கூர்ந்து நோக்குகையில் இந் நிலையைப் புரிந்துகொள்ள முடியும்.

மேலே குறிப்பிட்டபடி ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு குடும்ப ஆட்சியை நீண்ட காலத்துக்கு நிலை நிறுத்திக் கொள்வதற்கு வழியமைத்த, கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வரம்கொடுத்த, நினைத்த விதத்தில் சட்டங்களைக் கூட பலவந்தமாக மாற்றியமைத்து தனக்கு வேண்டிய விதத்தில் ஆட்சியைக் கொண்டு செல்லும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்த யுத்த வெற்றி கிடைத்து, இன்றோடு இரண்டு வருடங்கள்.

எனினும் வடக்கு தமிழ் மக்களுக்கென்றால், தமது வீடுகளைக் கை விட்டுவிட்டு, அகதி முகாம்களெனும் சிறைகளுக்குள் வர நேர்ந்து, இன்றோடு இரண்டு வருடங்கள். குடும்பத்தின் உயிர்களைக் காப்பாற்றவென செய்து கொண்டிருந்த தொழில்களைக் கைவிட்டுவிட்டு அரசாங்கத்தின் முட்கம்பிகளுக்குள் சிறைப்பட்டு ‘வெறுமனே’ பார்த்திருக்க நேர்ந்து, இன்றோடு இரண்டு வருடங்கள். பாடுபட்டு உழைத்த பணத்தைக் கொண்டு, சுடச் சுட சமைத்து உண்ணும் புதிய உணவுகளுக்குப் பதிலாக பூஞ்சனம் பிடித்த சோற்றையும் பருப்பையும் விழுங்கி உள்ளே தள்ள நேர்ந்து, இன்றோடு இரண்டு வருடங்கள்.

பிள்ளைகளின் பாடசாலைகள் இராணுவ முகாம்களுக்கென கைப்பற்றப்பட்டதால் பிள்ளைகளின் கல்விப் பயணம் நிறுத்தப்பட்டு இன்றோடு இரண்டு வருடங்கள். இந்தியாவில் தேர்தல்கள் நெருங்கும்போது இலங்கைத் தமிழ் மக்கள் குறித்து முதலைக் கண்ணீர் விடும் சோனியா காந்தி போன்றவர்களுக்கு நிலையங்கள், சுற்றுலாப் பயணிகளுக்கான ஹோட்டல்களைக் கட்டுவதற்கு இடங்களைக் கொடுத்துவிட்டு தாம் பிறந்த மண்ணிலேயே அனாதைகளாகி இன்றோடு இரண்டு வருடங்கள்.

அது மட்டுமல்லாது, குறைந்தபட்சம் தமக்கெதிராக முறைப்பாடொன்று கூட அற்ற தமிழ் இளைஞர்கள், தமது கறுத்த தோல் நிறத்தினாலும், தமிழ் மொழியைப் பேசுவதன் காரணத்தினாலும் சிறைச்சாலைகளில் தடுத்து நிறுத்தப்பட்டு, இன்றோடு இரண்டு வருடங்கள். தமிழ்த் தாய்மார்கள் காணாமல்போன தமது பிள்ளைகள் மற்றும் உறவினர்களைத் தேடி பல துயரங்களை அனுபவித்தபடி, கேலி கிண்டல்களுக் ஆளானபடி ஒவ்வொரு இராணுவ முகாம்களாக அலைய ஆரம்பித்து, இன்றோடு இரண்டு வருடங்கள்.

ஆகவே இந்த ‘இரண்டு வருடக் கொண்டாட்டம்’ ஆனது, வெற்றியின் இரண்டு வருடங்களல்ல. துயரங்களினதும் கட்டுப்பாடுகளினதும் இரண்டு வருடங்கள். வன்முறையினதும் ஏகாதிபத்தியத்தினதும் இரண்டு வருடங்கள். வரப் போகும் இருபது வருடங்களையும் கூட, கடந்த இரண்டு வருடங்களைப் போல இலகுவாகக் கழித்துவிட ராஜபக்ஷ அரசாங்கம் தயாராகி வருகிறது. அந் நிலையை மாற்ற வேண்டும். யுத்தம் முடிவுற்ற மூன்றாம் வருடத்தை நாம் இன்றிலிருந்து ஆரம்பிக்கிறோம். நாம் எல்லோரும் இவ்வருடத்திலாவது இந்நிலையை மாற்றத் தீர்மானிக்க வேண்டும். உண்மையான தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்பக் கூடிய, சகோதர தமிழ் மக்களின் மீது சுமத்தப்பட்டிருக்கும் வன்முறையை அகற்றுதலுக்கும், அதற்காகப் போராடுதலுக்குமான வருடமாக இவ்வருடத்தை ஆக்கிக் கொள்வோமாக.

 

நன்றி: உயிர்மை

 

நாளுக்கு நாள் எங்கள் கலாசாரக் கோலங்கள் மாறிவருகின்றன. வெளிநாட்டு கலாசாரம் என்பதற்கு அப்பால் தென்னிலங்கையின் தாக்கமும் எங்கள் மீது மோதிக் கொள்வதை உணர முடியும். எதுவாயினும் எங்கள் தமிழினம் ஒன்று தான் தனது உயர்ந்த கலாசாரத்தை மிக எளிதாக மறந்துவிடக் கூடியது என்பது நிரூபணமாகி விட்டது.

எங்கள் இளைஞர்களில் பெரும்பாலானவர்களின் ஆடை அலங்காரங்களை நினைக்கும் போது இலவசக் கல்வியின் பயன்பாடு தமிழர்களுக்கு பெரிதாக இல்லை என்று நினைக்கும் அளவிற்கு நிலைமை உள்ளது.

ஒரு இனத்தின் எதிர்காலம் என்பது அந்த இனத்தின் இளம் சமூகத்தின் கையில் உள்ளது என்பது பொதுவான முடிபு. இந்த முடிபு சரியானது என நாம் நினைத்திருந்த காலமும் இருந்தது. ஆனால் அந்த நினைப்புகளெல்லாம் அடிபட்டுப்போக, இப்போது எல்லோரும் பதம்பார்க்கும் இனமாக நாம் மாறிவிட்டோம்.

கால அசைவில் நடந்த மிக மோசமான சதித் திட்டங்களுக்கு ஈழத் தமிழினம் இரையாகிப் போன துயரத்தின் மத்தியில் இன்றைய இளைஞர்களின் நோக்கம், இலக்கு, அவர்களின் அறிவியியல்சார் விடயங்களை நோக்கும்போது வேதனை தாள முடியவில்லை. எங்கள் இனத்தின் எதிர்காலம் எப்படியுள்ளது? அரசியலின் சமகால நிலைமை எமக்குக் சாதகமானதா? இதுபற்றி எமது இளம் சமூகம் சிந்திப்பதாக இல்லை.

இளம் சமூகத்தின் சிந்தனையிலும் அதன் கேள்வியிலுமே எங்கள் அரசியல் சமூக, பொருளாதார எழுச்சி தங்கியுள்ளபோதிலும், எங்கள் இளைஞர்கள் இப்போது ஒற்றை காதில் தோடு அணிந்துகொண்டு உச்சமான மகிழ்ச்சியில் திரிகின்றனர்.

கடவுளே! ஐ.நா.சபை முதல் உலக நாடுகள் வரை ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட யுத்தம் மிக மோசமானது என குரல் கொடுத்து வருகையில்,

சம்பிரதாயத்திற்கேனும் கவலை வெளிப்படுத்தும் பண்பாடு எங்களிடம் இல்லாமல் போனமை மாபெரும் துரதிர்ஷ்டமே. ஒரு காதில் தோடு, ரவுசர் முழுவதிலும் வெள்ளிச் சரங்கள், கட்டற்ற சுதந்திரம் எப்படியும் நடக்கலாம் என்ற மிடுக்கு, மற்றவர்கள் பற்றி எந்த நினைப்பும் அற்ற அசாதாரண போக்கு என்ற ஒரு சூழமைபில் எமது இளம் சமூகம் எங்கே போகிறது?

இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் உரிமை கோர எவரும் இல்லாத நிலையில் எங்கள் எதிர்காலம் அடையாளம் இல்லாத இனமாக மாறும் சூழ்நிலைக்கு எங்களை இட்டுச்செல்லும் என்பது மட்டுமே நிஜமாகவுள்ளது.

- Valampuri-

 அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தை தனது சர்வாதிகாரப் பிடிக்குள் வைத்துக் கொண்டு அடக்கியாள முற்படுவதாக பேராசிரியர் ரட்ண ஜீவன் ஹ_ல் குற்றம் சாட்டுகின்றார்.

முன்னொரு காலத்தில் விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தை எவ்வாறு அடக்கியாள முற்பட்டார்களோ அதேவழியிலேயே டக்ளஸ் தேவானந்தாவும் சர்வாதிகாரமாக நடந்து கொள்ள முற்படுகின்றார் என்றும் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹ_ல் மேலும் தெரிவித்துள்ளார்.சிங்களப் பத்திரிகையான லக்பிமவுக்கு வழங்கிய நேர் காணல் ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தின் கவுன்சிலுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட 25 பேரில் 13 பேர் டக்ளஸ் தேவானந்தாவால் தெரிவு செய்யப்பட்டவர்கள். அதேபோன்று யாழ்.பல்கலைக்கழக கவுன்சில் கூட்டம் நடைபெற முன்பாக டக்ளஸினால் ஒரு அதன் உறுப்பினர்களுடன் ஒரு கலந்துரையாடல் நடத்தப்படும்.

பல்கலைக்கழக கவுன்சில் கூட்டத்தில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான கட்டளைகள் அங்கு வழங்கப்பட்டு விடும். துணைவேந்தர் தெரிவில் யாருக்கு வாக்களிப்பது போன்ற முடிவுகள் உட்பட எல்லா முடிவுகளும் ஏற்கனவே எடுக்கப்பட்டு விடும். துணைவேந்தரைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பது அவருக்கு அவசியமாக உள்ளது. இதனால் எனது நியமனத்தை அவர் விரும்பவில்லை. கிறிஸ்தவனான என்னை துணைவேந்தராக நியமித்தால் இந்துக்கள் கோபம் கொள்வார்கள் என அவர் ஜனாதிபதிக்குச் சொல்லி இருக்கிறார். இதனால் எனக்கு அவர்கள் ஆதரவு தெரிவிப்பதாக முக்கியமான இந்துத் தலைவர்களிடம் அறிக்கை பெற்று வருமாறு கோரப்பட்டேன். பெரும்பாலான இந்துக்கள் நான் துணைவேந்தராக வருவதையே விரும்புகிறார்கள். ஜனாதிபதிக்கு டக்ளஸ் அவ்வாறு சொன்னதன் ஊடாக அவர்களை அவர் அவமானப்படுத்தி இருக்கிறார்.

தேவானந்தாவுக்கு வேண்டியவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் பல்வேறு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அப்பதவிகளுக்கான எத்தகைய விண்ணப்பங்களும் பகிரங்கமாகக் கோரப்பட்டதில்லை. அந்த நியமனங்களில் எத்தகைய ஒழுங்கும் கடைப்பிடிக்கப்படவுமில்லை.அதேபோன்று தான் பல் கலைக்கழகத்துக்கான விடுதி கள் கட்டுவது தொடர்பான 300 மில்லியன் ரூபாய் பெறுமதி யான கட்டட ஒப்பந்தமும் சட்டத் துக்குப் புறம்பான வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.குறிப்பாக அண்மைய கொள்ளைகளுக்கும் கொலைகளுக்கும் ஈ.பி.டி.பி. உறுப்பினர்களே பொறுப்பு என மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்ருசிங்க கூறியதன் பின்பு இந்த முறைகேடுகள் தொடர்பாக எங்காவது முறையிட மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சுயாதீனத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய மூலங்களில்லை. தமிழ் மக்களோடு தொடர்பு கொள்வதென்றால் ஜனாதிபதி தேவானந்தாவை விட்டுவிட்டு தேர்தல்ள் மூலம் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தலைவர்களுடன் அவர் பேச வேண்டும்.

யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கான வாக்களிப்பில் முதல் மூவருள் ஒரு வராக நான் தெரிவு செய்யப்பட்டேன். முன்னதாக இருந்த துணைவேந்தரின் பதவிக்காலம் முடிவடைவதற்கு மூன்று நாள்களுக்கு முன்னதாக ஜனாதிபதி யால் நானும் எனது மனைவியும் அலரி மாளிகைக்கு தேநீர் விருந்தொன்றுக்கு அழைக்கப்பட்டோம். யாழ் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கு என்னை நியமிப்பதற்கான நியமனக் கடிதம் மறுநாள் காலை ஜனாதிபதிச் செயலகத்திலிருந்து அனுப்பப்படும் என்ற உறுதி மொழியுடன் நாங்கள் விடைபெற்றோம்.

ஆனால் பின்னர் அவ்வாறு நடைபெறவில்லை. டக்ளஸ் தேவானந்தாவின் எதிர்ப்புக்காரணமாக ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை மீறி விட்டார் என்றும் பேராசிரியர் ஹ_ல் தனது நேர்காணலில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

கொழும்பு: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கொலை செய்ய விடுதலைப் புலிகள் திட்டமிட்டார்கள் என்ற கே.பியின் குற்றச்சாட்டு அபாண்டமானது என்றும், இந்தியாவில் தங்களுக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சகச் சூழ்ச்சி என்றும் விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

புலிகளின் தலைமைச் செயலகத்தின் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ஆ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

2009 மே மாதம் 18ம் நாளிலிருந்து எமது ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த நிலையில், எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தை நாம் ஜனநாயக வழியில் முன்னெடுத்து வருகிறோம்.

எமது சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதியுச்ச தியாகங்களை எமது போராளிகள் செய்திருக்கிறார்கள். காலத்துக்குக் காலம் எமது அமைப்பின் போராட்ட முறைகளை மாற்றியமைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்திருக்கிறோம்.

கரந்தடிப் படை நடவடிக்கையில் தொடங்கி எதிரியால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் படை நடவடிக்கைகள் பலவற்றை எதிர்த்தும், எதிரியின் படைத்தளங்களைத் தகர்த்தும், எமது நிலப்பகுதிகளை மீட்டெடுத்து, ஒரு நாட்டுக்குரிய முழுமையான நிர்வாக மற்றும் படைக் கட்டமைப்புக்களை நிலைநிறுத்தி, தனிச்சுதந்திர தேசத்துக்கான கட்டுமானங்களை உருவாக்கி மக்களின் சுதந்திர வாழ்வுக்கு உறுதிப்படுத்தப்பட்ட அரசொன்றை நடத்தி வந்தோம்.

எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உலகம் புரிந்துகொள்ளாமல் எம்மைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்ததாலும், ராஜதந்திர சூழ்ச்சிகளாலும், பெரும்பலத்தோடு நடத்தப்பட்ட பன்னாட்டுப் போர் நெறிகளை மீறிய கொடூர போரினாலும் நாம் ஆயுதப் போராட்டத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளோம்.

எனினும், எமது மக்களின் தேசிய ஒருமைப்பாட்டுணர்வையும், தமிழீழ விடுதலை மீது கொண்ட அசைக்க முடியாத பற்றுதலையும், எமது மாவீரர்களின் தியாகத்தின் வழிகாட்டுதலையும் துணையாகக் கொண்டு நாம் எமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை உணர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

ஐ.நா நிபுணர் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், வேறு பல நடுநிலையாளர்கள் வெளிப்படுத்திய ஆவணங்களிலும் சிங்கள அரசு தமிழர் மீது மேற்கொண்ட இனப் படுகொலை தொடர்பான உண்மைகள் மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் ராஜபக்சே அரசு செய்வதறியாது திணறிக் கொண்டிருக்கிறது.

இதேவேளை, தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் சிங்கள தேசத்தைக் கிலி கொள்ள வைத்துள்ளது. ஈழத் தமிழர் மேல் மேற்கொள்ளப்பட்ட இனப் படுகொலை தொடர்பான எதிர்ப்புணர்வும், ஈழத் தமிழரின் அரசியல் உரிமையை வென்றெடுப்பதற்கான ஆதரவும் தமிழகத்தில் பெருகிவரும் நிலையில் செல்வி ஜெயலலிதா அவர்கள் தமிழக முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தனக்குப் பாதகமாவே நோக்குகிறது சிங்களப் பேரினவாத அரசு.

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையும் தமிழகத் தேர்தல் முடிவும் ராஜபக்சே அரசுக்கு மிகப்பெரும் ஆபத்தாகவே முடியுமென்று உணர்ந்து கொண்ட சிங்கள அரசியல் ஆலோசகர்களின் மதிநுட்பமான சதித் திட்டமிடலில் முன்னிறுத்தப்படுவரே கே.பி என்ற செல்வராசா பத்மநாதன் என்ற குமரன் பத்மநாபன்.

இந்தியத் துணைக்கண்டத்தில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கெதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சக நோக்கோடு கே.பி ஊடாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிட்டு வருகிறது சிறிலங்கா அரசு.

சிறிலங்கா அரச படைகளின் பிடியிலுள்ள எவருமே விடுதலைப் புலிகள் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திச் செயற்பட முடியாது. இதுவரை காலமும் அவ்வாறு நடந்ததில்லை; இனியும் நடக்கப் போவதுமில்லை.

அவ்வகையில் பத்மநாதனும் தன்னை விடுதலைப் புலிகளின் உறுப்பினராக அடையாளப்படுத்துவதும், தான்தான் எஞ்சியிருக்கும் மூத்த போராளியென்று சொல்லிக் கொள்வதும், எமது அமைப்பின் சார்பில் பேசுவதும் தவறானது. அவர் எதிரியின் பிடிக்குட் சிக்கிய நாளிலிருந்து அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் கருத்துச் சொல்லும் தகுதியை இழந்துள்ளார்.

அதன் பின்னரான அவரது செயற்பாடுகள், கருத்துக்கள் எவையுமே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினது அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறோம். எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நாசகாரத் திட்டங்களுக்கு கே.பி அவர்கள் துணை போகிறார் என்பதையே அவரின் நடவடிக்கைகள் வெளிக்காட்டுகின்றன.

பத்மநாதன் தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் தற்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களைக் கொலை செய்வதற்கு விடுதலைப் புலிகள் திட்டமிட்டார்கள் என்ற அவதூறை வெளிப்படுத்தியிருக்கிறார். இது அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டு. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சகச் சூழ்ச்சியோடே இந்தப் பேட்டி வடிவமைக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தமிழ்நாட்டு உறவுகளும் அரசியல் தலைவர்களும் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறோம்.

அன்பான தமிழ்பேசும் உறவுகளே,சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் ராஜதந்திர சதிவலைக்குள் புதைந்து போகாமலும் கே.பி போன்றோரை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் வஞ்சகச் சூழ்ச்சிக்குத் துணை போகாமலும் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நார்வே-நெடியவன் ஜாமீனில் விடுதலை:

இந் நிலையில் நார்வே நாட்டில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கியத் தளபதியான நெடியவன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டியது தொடர்பான புகாரின் பேரில் அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், போலீஸாரின் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும், ஜூன் 1ம் தேதி அவர் மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

குருபெயர்ச்சி சாதகமில்லாமல் போனதால், மஞ்சள் நிறத்தில் இருந்து, அடிக்கடி வெள்ளை துண்டுக்கு கருணாநிதி மாறி வருகிறார். ஆரம்பம் முதல் கறுப்பு துண்டு அணிந்த கருணாநிதி, ஐந்தாண்டுகளுக்கு மேலாக மஞ்சள் துண்டுக்கு மாறினார். “கழுத்து பகுதியில் அதிக வலி ஏற்படுவதால், கனமான மஞ்சள் துண்டு அணிந்தால் கழுத்து பகுதியில் வெப்பம் ஏற்படும். வலியை அது கட்டுப்படுத்தும் என, மருத்துவர்கள் ஆலோசனைப்படி துண்டு மாற்றம் நடந்தது’ என, தி.மு.க., தரப்பில் கூறப்பட்டது.

“கருணாநிதி ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசியில் பிறந்ததால், குருபலம் பெற அவர் மஞ்சள் துண்டு அணிந்தார்’ என, ஆன்மிக பெரியோர் கூறி வந்தனர். முதல்வராக பதவியில் இருந்த காலத்தில் மஞ்சள் துண்டை அவர் தவிர்த்தது இல்லை. தஞ்சாவூரில் இரண்டாண்டுகளுக்கு முன் மறைந்த அன்பில் பொய்யாமொழி குடும்ப திருமணம் நடந்த போது, முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், தி.மு.க., கரை வேட்டியை தவிர்த்து, பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து வந்தார். அவ்விழாவில் பேசிய ஸ்டாலின், “அன்பில் பொய்யாமொழியின் குடும்பத்தார் கேட்டுக் கொண்டதால், பட்டுக்கு மாறினேன்’ என பேசினார். அடுத்து பேசிய கருணாநிதி, “நாம் திராவிட கொள்கையில் தோய்ந்தவர்கள். எக்காரணம் கொண்டும் நம் கரை, அடையாளங்களை மாற்றக் கூடாது’ என, பட்டு வேட்டி, சட்டைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

சென்றாண்டு, செப்டம்பர் 25ம் தேதி, தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழாவில், பெரிய கோவில் நந்தி மண்டபத்தில், நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் தலைமையில், 1,000 நடனக் கலைஞர்கள் ஒரு சேர நடனமாடினர். இந்நிகழ்ச்சியை ரசிக்க வந்த அப்போதைய முதல்வர் கருணாநிதி, பட்டு வேட்டி, பட்டுச் சட்டை, பட்டுத்துண்டு அணிந்து வந்தார். முன்னதாகவே, மேடைக்கு வந்துவிட்ட கனிமொழி மற்றும் கருணாநிதி குடும்பத்தார் மற்றும் அமைச்சர்கள் ஓடி வந்து, கருணாநிதி பட்டாடை அணிந்து வந்ததை புகழ்ந்தனர். “தி.மு.க., படுதோல்வி, கனிமொழி கைது, ஸ்பெக்ட்ரம் பிரச்னையால் குழப்பம்’ என, பல தோல்விகளுக்கு இடையே, கடந்த சில நாட்களாக, கருணாநிதி மஞ்சள் துண்டை தவிர்த்து, அடிக்கடி வெள்ளை துண்டுக்கு அணிந்து வருகிறார். சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னரும், கனிமொழி கைது செய்யப்பட்ட பின், டெல்லி பயணத்தின் போதும் கருணாநிதி வெள்ளைத்துண்டு அணிந்திருந்தார்.

இதுபற்றி ஜோதிடர்கள் சிலர் கூறியதாவது: மஞ்சள் துண்டு குருபலத்துக்காக அணிவது. மே 8ம் தேதி நடந்த குருபெயர்ச்சி கருணாநிதிக்கு சாதகமாக இல்லை. குரு பகவான், 12ல் உள்ளார். இந்த சூழலில் அவர் மஞ்சள் நிற துண்டு அணியாமல், வெள்ளை துண்டு அணிந்தால், அது அவருக்கு அமைதியை தரும். வெள்ளை நிறம் பொதுவாக சந்திரன், சூரியன், சுக்கிரன் ஆகிய ராசிகளுக்கானது. குருவின் பலவீனத்தை குறைத்து, அமைதி தரும் என்பதால் இம்மாற்றம் நடந்துள்ளது. அடுத்தாண்டு மே மாதம் நடக்கும் குருபெயர்ச்சி வரை, அவர் வெள்ளைத் துண்டு அணிந்து, அதற்கான பரிகாரத்தை அவரோ அல்லது அவரது குடும்பத்தாரோ மேற்கொண்டால், அவருக்கு மன அமைதி ஏற்படும். அதனால் தான் கருணாநிதி அடிக்கடி வெள்ளை துண்டுக்கு மாறி, மீண்டும் மஞ்சள் துண்டு அணிகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Older Posts »

Follow

Get every new post delivered to your Inbox.