
ஆறுமாத காலமாக அரசுடன் நடத்திய பேச்சு மூலம் எதுவும் நடக்கவில்லை. இதனைத் தொடர முடியாது. நாங்கள் இது பற்றி அரச தரப்பினருக்குச் சொல்லியிருந்தோம். பேச்சைத் தொடர வேண்டும் என்பதற்காக அர்த்தமற்ற பேச்சில் நீண்ட காலம் ஈடுபட முடியாது. அப்படிச் செய்வதன் மூலம், தமிழர் பிரச்சினைக்கு நியாயமான ஒரு தீர்வைக் காண்பதற்கு அரசு ஆக்கபூர்வமான வகையில் பேச்சுக்களில் ஈடுபடுகின்றது என்று உலகம் கருதுவதற்கு நாம் இடமளிக்க முடியாது. இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
உதயன் பத்திரிகைக்கான இரா. சம்பந்தனுடனான பேட்டியின் விவரம் வருமாறு:
கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு அரசு பதிலளிக்காத நிலையில் உங்கள் அடுத்த அரசியல் நகர்வு என்ன?அடுத்த கட்டப் பேச்சைத் தொடருவதற்கு முன்பாக நாங்கள் முன்வைத்த 3 விடயங்களுக்குப் அவை நிபந்தனைகள் அல்ல பதிலாக தன்னுடைய நிலைப்பாட்டை அரசு முன்வைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தோம். சுருக்கமாகச் சொல்வதானால் நாங்கள் இந்தப் பேச்சு மூலம் ஒன்றையும் அடையவில்லை. அதற்காக நாங்கள் அரசுடன் பேச மாட்டோம் என்று சொல்வில்லை. அரசியல் தீர்வை காண்பதற்கு நாங்கள் பேசத் தயங்கவில்லை. அதற்கு உண்மையில் இரு பகுதி யும் இதயசுத்தியுடன் உண்மை யாகப் பேசவேண்டும். நாங்கள் மட்டும் பேசிப் பயன் இல்லை. இருபகுதியும் ஆக்கபூர்வமாகப் பேசவேண்டும்.
இப்போதைக்கு நாங்கள் நிலை மைகளை அவதானித்துக் கொண்டி ருக்கின்றோம். எடுக்க வேண்டிய முடிவுகளை எடுக்க வேண்டிய நேரத்தில் சரியாக எடுப்போம். எங்களது தீர்வு தொடர்பான நிலைப்பாட்டடில் மூன்று விட யங்களை முன்வைத்திருந்தோம். ஒன்று ஆட்சிக் கட்டமைப்பு, சட்ட அதிகாரம், நிர்வாக அதிகாரம். மத்திய அரசுக்கும் அதிகாரபகிர்வு அலகுக்கும் இடையில் கருமங்கள், கடமைகள் எவை என்ற பிரிப்பு, நிதி மற்றும் வரி வசூலிப்பு ஆகிய மூன்று விடயங் களைத் தெளிவுபடுத்துமாறு கேட்டி ருந்தோம். அவை தொடர்பான அரசின் நிலைப்பாட்டை அறியாமல் பேச்சைத் தொடர்வதில் அர்த்தமில்லை.
நீங்கள் முன்வைத்த விடயங்களுக்குப் பதிலளிக்காத போதும், இந்த இருவார காலப்பகுதியில் அரச தரப்பினர் உங்களுடன் தொடர்பு கொண்டார்களா உத்தியோகபூர்வமான முறையில் எதுவும் பேசவில்லை. உத்தியோகப்பற்ற முறையில் சில விடயங்களை கலந்துரையாடினர். அதைப் பற்றி இப்போது பேச விரும்பவில்லை.
அப்படியானால் கூட்டமைப்பு அடுத்து என்ன செய்யப் போகிறது?
அடுத்த கட்டம் பற்றி பேசுவதற்கு இன்னும் காலம் வரவில்லை. இரு வார காலத்துக்குள் பதிலளிக்குமாறு நாங்கள் கேட்டிருந்தோம். சமீபத்தில் நடந்த பேச்சுக்கள் ஒரு மாதத்துக்கு இரண்டு என்ற அடிப்படை யில் நடைபெற்றன. ஆரம்பத்தில் ஒரு மாதத்துக்கு ஒரு பேச்சு இடம்பெற்றது. பேச்சை இழுத்தடிக்க விரும்பாததால் பின்னர் மாதத்துக்கு இரண்டாக அதனை அதிகரித்தோம். அந்த அடிப்படை யிலேயே இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நாங்கள் கேட்டிருந்தோம். இரண்டு வாரம் என்பதை நிபந்தனையாகக் குறிப்பிடப்படவில்லை. அரச தரப்பினர் நாடாளுமன்றத் தெரிவுக் குழு சம்பந்தமான பிரேரணை அச்சிட்டுவிட்டதாகக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அதனை அவர்கள் இன்னும் நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரவில்லை. அது எப்போது சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரியவில்லை. இதனை வைத்து அரசு பேச்சை இன்னும் முறித்துக் கொள்ளவில்லை என்று எடுத்துக் கொள்ளலாம் போன்றும் தோன்றுகிறது.
நீங்கள் அரசு பேசுகிறோம் என்று கூறுகிறீர்கள். ஆனால், கடைசிப் பேச்சின் பின்னர் அரசு விடுத்த அறிக்கையில், சுதந்திரக் கட்சியே உங்களுடன் பேசுவதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது. அப்படி இருக்கையில் அரசுடனான பேச்சு என்று இதனை எப்படிச் சொல்ல முடியும்?
நாங்கள் பேச்சை ஆரம்பித்தது அரசுடன்தான். ஜனாதிபதி தான் எங்களுடன் பேசும் அரச குழுவை நியமித்திருந்தார். அரசில் பிரதானமான கட்சி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி. ஜனாதிபதியும் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர். பிரதமரும் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்தான். அவர்களுடைய கூட்டுக் கட்சிகள் எண்ணிக்கையில் அதிகம். இருப்பினும் நாங்கள் இதுவரை காலமும் அரசுடன் தான் பேசினோம். இறுதிக் கட்டத்தில்தான் அவர் கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியு டன் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு பேசியது என்று சொன் னார்கள். அவர்களுக்கு நாங்கள் வழங்கிய இரண்டு வாரகாலத்துக் குள் அரசில் அங்கம் வகிக்கின்ற சகல கட்சிகளுடனும் பேசி அது பற்றி அறிவிக்க முடியாது என்று சொல்வதற்காக பேச்சு சுதந்திரக் கட்சிக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் நடந்ததாக அவர்கள் காட்ட முற்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் அரசில் உள்ள ஏனைய கட்சிகளுடன் ஏற் கனவே பேசிக்கொண்டிருப்ப தாக எம்மிடம் கூறியிருந்தார்கள். எங்களுடைய நடவடிக்கை எதிர் காலத்தில் எவ்வாறு அமையும் என்று கூறுவதற்கான காலம் இன்னும் கனியவில்லை.
கூட்டமைப்புக்கு பதிலளிக்காத நிலையில் நாடாளுமன்றத் தெரிவுக் குழு பற்றியே அரசு அக்கறையு டன் பேசுகிறது. அப்படி ஒரு நிலை வந்தால் கூட்டமைப்பு தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்குமா?
நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு அங்கீகரிக்கின்றத்துக் கான வாய்ப்புக்கள் இருப்பதா இல்லையா என்ற முடிவை இப் போது சொல்ல முடியாது. தெரி வுக்குழு என்ன அடிப்படையில் இயங்கப்போகின்றது, அதில் என்னென்ன அம்சங்கள் உள்ளடக் கப்பட்டுள்ளன என்பவற்றைக் கூர்ந்து கவனிக்க வேண்டி இருக் கிறது. இது தொடர்பில் நிறைய விடயங்கள் சிந்திக்க வேண்டி யுள்ளது.
அதேவேளை, பயனற்ற ஒரு அணுகு முறையில் நாங்கள் பங்கு பற்றுவதிலும் எதுவும் நடக்கப் போவதுமில்லை.
பேச்சு தடங்கலுக்குள் சிக்கிக் கொண்டுள்ள நிலையில் இந்தியா வின் நிலைப்பாடு என்ன?
இந்தியா ஒன்றும் தெரிவிக்க வில்லை. இந்தியாவினால்தான் பேச்சு ஆரம்பிக்கப்பட்டது. எம் மைப் பொறுத்த வரையில் கடந்த 5 மாத காலமாக எதுவும் இடம் பெறவில்லை. எனவே இதனைத் தொடர முடியாது என்பதை அவர்களுக்குச் சொல்லியிருந் தோம். அவர்கள் அரசுடனும் பல முறை பேசி இருக்கிறார் கள். எம்முடனும் பேசி இருக் கிறார்கள். தொடர்ந்தும் பேசி வருகிறார்கள்.
எல்லாத் தமிழ்க் கட்சிகளை யும் சுதர்சன நாச்சியப்பன் புதுடில் லிக்கு அழைத்துள்ளாரே இதன் நோக்கம் என்ன?
மனித உரிமைகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமையம் ஏற்பாடு செய்த கலந் துரையாடலுக்கு அழைத்திருக் கின்றார்கள். நாச்சியப்பன் என் னையும் தொடர்பு கொண்டு பேசினார். ஆனால் நான் அதில் கலந்து கொள்ளவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சித் தலைவர்கள் புதுடில்லி செல்கின்றார்கள். அத்துடன் வேறு கட்சித் தலை வர்களும் செல்கின்றனர்.தமிழ்க் கட்சிகளின் ஒட்டு மொத்தமான நிலைப்பாட்டை இந்தியா அறிவதற்காகவே இந் தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேசம யம் தமிழகத்தில் இப்போது நிலைமைகளில் பெரும் மாற் றங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்திய மார்சிஸ்ட் கட்சி அண்மையில் சென்னையில் ஒரு பெரிய மாநாடு நடத்தி இருந்தது. பாரதீய ஜனதாக் கட்சி அடுத்த மாதம் அத்தகைய ஒரு மாநாட்டை நடத்த உள்ளது. எனவே இந்தி யாவைப் பொறுத்த வரையில் ஆளும் கட்சிக்கு அப்பால் ஏனைய கட்சிகளும் எமது விடயத்தில் அக்கறை செலுத்துகின்றன. தமிழக சட்ட சபையிலும் எமக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல தலைவர் கள் தொடர்ந்து எமக்காகக் குரல் கொடுத்து வருகிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வைச் சந்தித்துப் பேசும் ஏற்பாடு கள், முன்முயற்சிகள் ஏதும் எடுக்கப்பட்டிருக்கின்றனவா?
தமிழக முதல்வரை சந்திக்க வேண்டிய தேவை இருக்கின் றது. அவரை நாங்கள் சந்திப்போம். அவர் சட்டசபையில் பல தீர் மானங்களை நிறைவேற்றியுள் ளார். இலங்கை தமிழர் பிரச்சினை தீரும் வரையில் தமிழ் நாட்டு அரசின் நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்திருக் கின்றார். ஆகவே நாம் அவரு டன் சந்திப்பொன்றை மேற் கொள்ளவுள்ளோம். அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். கோத்தபாய ராஜபக்ஷ அண் மையில் “ஹெட்லைன்ஸ் ருடே’ தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில், புலிகளை ஒழித்து விட்டதால் தமிழர்களுக்கு இனி மேல் உரிமைகளை வழங்கவேண் டியதில்ல என்று கூறி இருக்கிறாரே அது பற்றி உங்கள் கருத்து என்ன? இந்த மாதம் 4ஆம் நாள் அரசு டனான பேச்சுக்கு அடுத்த திகதி குறிப்பதற்கு முன்பாக சில விட யங்களை அரசு தெளிவுபடுத்த வேண் டும் என்ற முடிவை நாங்கள் எடுத்த பொழுது, கோத்தபாய வின் பேட்டி பற்றி எமக்குத் தெரிந்தே இருந்தது. அரசாங்கத்தின் தற்போதைய போக்கை பார்த்தால் அரசில் கோத்த பாயவின் குரல் ஓங்குவதைப் போலவே தெரிகின்றது.