Feeds:
Posts
Comments

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தனக்கு எதிராகக் கொண்டுவரப்படக்கூடிய தீர்மானத்தில் இருந்து தப்புவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசு, மேற்குலகின் முக்கிய நாடுகளுக்கு விடுத்த தூது முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. மேற்கு நாடுகளுடன் பேசி இலங்கைக்கு எதிரான அவற்றின் கடும் போக்கை மாற்ற மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நஷீட்டின் உதவியை கொழும்பு நாடி இருந்தது.

எனினும் இது தொடர்பில் நஷீட் விடுத்த கோரிக்கைகளை மேற்கு நாடுகள் நிராகரித்துவிட்டன என்று இராஜதந்திர வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் மீள் பரிசீலனை செய்யப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலுள்ள மாலைதீவு ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நெருக்கமானவர். எனவேதான் மேற்கு நாடுகளுடன் பேசி இணக்கம் ஒன்றுக்கு வருவதற்கு அவரது உதவியைக் கொழும்பு நாடி இருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடன் மாலைதீவு ஜனாதிபதி பேச்சுக்களை நடத்தினார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திலுள்ள முக்கியமானவர்களுடனும் பிரிட்டனின் வெளியுறவுத்துறை உயர் மட்டத்தினருடனும் தொடர்பு கொண்ட மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு எதிரான கடும்போக்கை இந்த நாடுகள் மேற்கொள்வது சரியல்ல என்று கேட்டுக்கொண்டார்.

மனித உரிமை மீறல்கள் இலங்கையில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுவது தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது எனவும் இதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் மாலைதீவு ஜனாதிபதி இந்த இரு நாடுகளுக்கு எடுத்துக் கூறியிருக்கிறார். எனவே தவறான தகவல்களின் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது நல்லதல்ல என்ற வாதத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.ஆனால் மாலைதீவு ஜனாதிபதியின் இந்தக் கோரிக்கையை மேற்படி நாடுகள் முற்றாக நிராகரித்துள்ளன என்று கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.

மனித உரிமை மீறல்கள் குறித்தான சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை அரசு இதுவரை சரியான பதிலை வழங்கவில்லையென்று சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்காவும் பிரிட்டனும், இலங்கை தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சரியான வகையில் தெளிவுபடுத்தவேண்டும் என்றும் எடுத்துக்கூறியிருக்கின்றன.அப்படிப்பட்ட ஒரு நிலையில், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பதற்கு இலங்கைக்கு இன்னும் மூன்று மாத கால அவகாசத்தை வழங்கவேண்டுமென மாலைதீவு ஜனாதிபதி இந்த நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார

 

Advertisements

ஐயா! யாழ்ப்பாணத்தில் என்ன நடக்குது 

 பொழுது சாய்ந்தால் மர்ம மனிதனின் பயம். விடிந்தால்; மர்ம மனிதன், பெண் கடத்தல், சிறுமியைக் காணவில்லை இப்படியான திகில் சம்பவங்கள். ஐயா! யாழ்ப்பாணத்தில் இப்போது என்ன தான் நடக்கின்றது எனத் தெரியாமல் உள்ளது. யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் பயப்பீதியில் உறைந்து போயிருக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மெளனமாக இருக்கின்றார்கள். இதை நாம் கூறினால் கூட்டமைப்புக்கு எதிர் என்று சொல்வார்கள். ஐயா! யாழ்ப்பாணத்தில் நடக்கின்ற சம்பவங்களை ஆராய்ந்து பார்க்கும் போது அவசரகாலச்சட்டத்தை நீடிக்கும் எண்ணத்துடன் சம்பந்தப்பட்டதென்று கூறமுடியாது. அப்படியானால் இவை ஏன்? என்று தீர ஆராய்ந்தால், உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்களிப்புக் காரணமாக இவர்களை நிம்மதியாக வாழவிடக்கூடாது என்ற நினைப்போடு நடப்பதாகவே தெரிகின்றது. நிலைமை இதுவாக இருக்கும் போது தமிழ் மக்கள் வாக்களித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள், மர்மமனிதன் என்ற பிரச்சினை நடக்கும் இடங்களுக்கு உடனடியாகச் சென்று விசாரணை நடத்துவது, அந்தப்பகுதி பொலிஸ் பொறுப்பதிகாரி, படை அதிகாரி ஆகியோருக்கு நிலைமையை எடுத்துக் கூறுவது, குய்யோ முறையோ என்று நாடாளுமன்றத்தில் கூப்பாடு போடுவது, தேவையாயின் உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்களையும் அழைத்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருப்பது. இப்படியல்லவா செய்ய வேண்டும்? ஆனால் எதுவுமே நடைபெறவில்லை. ஒரு சில பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்றிருந்தாலும் ஏனையவர்கள் எங்கே? அவர்கள் அடுத்த தேர்தலின் போதுதான் வருவார்களா? தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தமைக்காக இப்படிக் கொடூரம் நடக்கும் போது – அது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில், நாம் வாக்களித்தது தவறு என்ற முடிபை தமிழ் மக்கள் எடுப்பார்கள். அப்படியானதொரு முடிபை தமிழ் மக்கள் எடுத்துவிட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மீட்சியே இல்லை. உங்களுக்கு வாக்களித்துவிட்டு நாங்கள் உபாதைப்படும் போது நீங்கள் உங்கள் சொந்த அலுவலில் கவனமாக இருந்தால், மீண்டும் ஒரு தடவை உங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும். இந்த முடிபை மக்கள் எடுப்பார்களா? என்பதை பார்ப்பதற்கு நீண்டகாலம் காத்திருக்க வேண்டியதில்லை. வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அதனை அனுபவிக்க முடியும். ஆகையால் கூட்டமைப்பினர் உடனடியாக யாழ்ப்பாணத்தில் முகாமிட்டு போர்க்கொடி தூக்க வேண்டும். அன்னா ஹசாரே போல் உண்ணாவிரதம் இருக்காவிட்டாலும் உண்ணாவிரதம் என்ற பெயரில் ஒரு நாளாவது குந்தியிருங்கள். உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்.

வலம்புரி

ஆறுமாத காலமாக அரசுடன் நடத்திய பேச்சு மூலம் எதுவும் நடக்கவில்லை. இதனைத் தொடர முடியாது. நாங்கள் இது பற்றி அரச தரப்பினருக்குச் சொல்லியிருந்தோம். பேச்சைத் தொடர வேண்டும் என்பதற்காக அர்த்தமற்ற பேச்சில் நீண்ட காலம் ஈடுபட முடியாது. அப்படிச் செய்வதன் மூலம், தமிழர் பிரச்சினைக்கு நியாயமான ஒரு தீர்வைக் காண்பதற்கு அரசு ஆக்கபூர்வமான வகையில் பேச்சுக்களில் ஈடுபடுகின்றது என்று உலகம் கருதுவதற்கு நாம் இடமளிக்க முடியாது. இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். 

உதயன் பத்திரிகைக்கான இரா. சம்பந்தனுடனான பேட்டியின் விவரம் வருமாறு:

கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு அரசு பதிலளிக்காத நிலையில் உங்கள் அடுத்த அரசியல் நகர்வு என்ன?அடுத்த கட்டப் பேச்சைத் தொடருவதற்கு முன்பாக நாங்கள் முன்வைத்த 3 விடயங்களுக்குப் அவை நிபந்தனைகள் அல்ல பதிலாக தன்னுடைய நிலைப்பாட்டை அரசு முன்வைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தோம். சுருக்கமாகச் சொல்வதானால் நாங்கள் இந்தப் பேச்சு மூலம் ஒன்றையும் அடையவில்லை.  அதற்காக நாங்கள் அரசுடன் பேச மாட்டோம் என்று சொல்வில்லை. அரசியல் தீர்வை காண்பதற்கு நாங்கள் பேசத் தயங்கவில்லை. அதற்கு உண்மையில் இரு பகுதி யும் இதயசுத்தியுடன் உண்மை யாகப் பேசவேண்டும். நாங்கள் மட்டும் பேசிப் பயன் இல்லை. இருபகுதியும் ஆக்கபூர்வமாகப் பேசவேண்டும்.

இப்போதைக்கு நாங்கள் நிலை மைகளை அவதானித்துக் கொண்டி ருக்கின்றோம். எடுக்க வேண்டிய முடிவுகளை எடுக்க வேண்டிய நேரத்தில் சரியாக எடுப்போம். எங்களது தீர்வு தொடர்பான நிலைப்பாட்டடில் மூன்று விட யங்களை முன்வைத்திருந்தோம். ஒன்று ஆட்சிக் கட்டமைப்பு, சட்ட அதிகாரம், நிர்வாக அதிகாரம். மத்திய அரசுக்கும் அதிகாரபகிர்வு அலகுக்கும் இடையில் கருமங்கள், கடமைகள் எவை என்ற பிரிப்பு, நிதி மற்றும் வரி வசூலிப்பு ஆகிய மூன்று விடயங் களைத் தெளிவுபடுத்துமாறு  கேட்டி ருந்தோம். அவை தொடர்பான அரசின் நிலைப்பாட்டை அறியாமல் பேச்சைத் தொடர்வதில் அர்த்தமில்லை.

நீங்கள் முன்வைத்த விடயங்களுக்குப் பதிலளிக்காத போதும், இந்த இருவார காலப்பகுதியில் அரச தரப்பினர் உங்களுடன் தொடர்பு கொண்டார்களா உத்தியோகபூர்வமான முறையில் எதுவும் பேசவில்லை. உத்தியோகப்பற்ற முறையில் சில விடயங்களை கலந்துரையாடினர். அதைப் பற்றி இப்போது பேச விரும்பவில்லை.

அப்படியானால் கூட்டமைப்பு அடுத்து என்ன செய்யப் போகிறது?

அடுத்த கட்டம் பற்றி பேசுவதற்கு இன்னும் காலம் வரவில்லை.  இரு வார காலத்துக்குள் பதிலளிக்குமாறு நாங்கள் கேட்டிருந்தோம். சமீபத்தில் நடந்த பேச்சுக்கள் ஒரு மாதத்துக்கு இரண்டு என்ற அடிப்படை யில் நடைபெற்றன. ஆரம்பத்தில் ஒரு மாதத்துக்கு ஒரு பேச்சு இடம்பெற்றது. பேச்சை இழுத்தடிக்க விரும்பாததால் பின்னர் மாதத்துக்கு இரண்டாக அதனை அதிகரித்தோம். அந்த அடிப்படை யிலேயே இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நாங்கள் கேட்டிருந்தோம். இரண்டு வாரம் என்பதை நிபந்தனையாகக் குறிப்பிடப்படவில்லை. அரச தரப்பினர் நாடாளுமன்றத் தெரிவுக் குழு சம்பந்தமான பிரேரணை அச்சிட்டுவிட்டதாகக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அதனை அவர்கள் இன்னும் நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரவில்லை. அது எப்போது சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரியவில்லை. இதனை வைத்து அரசு பேச்சை இன்னும் முறித்துக் கொள்ளவில்லை என்று எடுத்துக் கொள்ளலாம் போன்றும் தோன்றுகிறது.

நீங்கள் அரசு பேசுகிறோம் என்று கூறுகிறீர்கள். ஆனால், கடைசிப் பேச்சின் பின்னர் அரசு விடுத்த அறிக்கையில், சுதந்திரக் கட்சியே உங்களுடன் பேசுவதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது. அப்படி இருக்கையில் அரசுடனான பேச்சு என்று இதனை எப்படிச் சொல்ல முடியும்?

நாங்கள் பேச்சை ஆரம்பித்தது அரசுடன்தான். ஜனாதிபதி தான் எங்களுடன் பேசும் அரச குழுவை நியமித்திருந்தார். அரசில் பிரதானமான கட்சி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி. ஜனாதிபதியும் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர். பிரதமரும் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்தான். அவர்களுடைய கூட்டுக் கட்சிகள் எண்ணிக்கையில் அதிகம். இருப்பினும் நாங்கள் இதுவரை காலமும் அரசுடன் தான் பேசினோம். இறுதிக் கட்டத்தில்தான் அவர் கள் ஸ்ரீ  லங்கா சுதந்திரக் கட்சியு டன் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு பேசியது என்று சொன் னார்கள். அவர்களுக்கு நாங்கள் வழங்கிய இரண்டு வாரகாலத்துக் குள் அரசில் அங்கம் வகிக்கின்ற சகல கட்சிகளுடனும் பேசி அது பற்றி அறிவிக்க முடியாது என்று சொல்வதற்காக பேச்சு சுதந்திரக் கட்சிக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் நடந்ததாக அவர்கள் காட்ட முற்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் அரசில் உள்ள ஏனைய கட்சிகளுடன் ஏற் கனவே பேசிக்கொண்டிருப்ப தாக எம்மிடம் கூறியிருந்தார்கள். எங்களுடைய நடவடிக்கை எதிர் காலத்தில் எவ்வாறு அமையும் என்று கூறுவதற்கான காலம் இன்னும் கனியவில்லை.

கூட்டமைப்புக்கு பதிலளிக்காத நிலையில் நாடாளுமன்றத் தெரிவுக் குழு பற்றியே அரசு அக்கறையு டன் பேசுகிறது. அப்படி ஒரு நிலை வந்தால் கூட்டமைப்பு தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்குமா?

நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு அங்கீகரிக்கின்றத்துக் கான வாய்ப்புக்கள் இருப்பதா இல்லையா என்ற முடிவை இப் போது சொல்ல முடியாது. தெரி வுக்குழு என்ன அடிப்படையில் இயங்கப்போகின்றது, அதில் என்னென்ன அம்சங்கள் உள்ளடக் கப்பட்டுள்ளன என்பவற்றைக் கூர்ந்து கவனிக்க வேண்டி இருக் கிறது. இது தொடர்பில் நிறைய விடயங்கள் சிந்திக்க வேண்டி யுள்ளது.

அதேவேளை, பயனற்ற ஒரு அணுகு முறையில் நாங்கள் பங்கு பற்றுவதிலும் எதுவும் நடக்கப் போவதுமில்லை.

பேச்சு தடங்கலுக்குள் சிக்கிக் கொண்டுள்ள நிலையில் இந்தியா வின் நிலைப்பாடு என்ன?

இந்தியா ஒன்றும் தெரிவிக்க வில்லை. இந்தியாவினால்தான்  பேச்சு ஆரம்பிக்கப்பட்டது. எம் மைப் பொறுத்த வரையில் கடந்த 5 மாத காலமாக எதுவும் இடம் பெறவில்லை. எனவே இதனைத் தொடர முடியாது என்பதை அவர்களுக்குச் சொல்லியிருந் தோம். அவர்கள் அரசுடனும் பல முறை பேசி இருக்கிறார் கள். எம்முடனும் பேசி இருக் கிறார்கள். தொடர்ந்தும் பேசி வருகிறார்கள்.

எல்லாத் தமிழ்க் கட்சிகளை யும் சுதர்சன நாச்சியப்பன் புதுடில் லிக்கு அழைத்துள்ளாரே இதன் நோக்கம் என்ன?

மனித உரிமைகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமையம் ஏற்பாடு செய்த கலந் துரையாடலுக்கு அழைத்திருக் கின்றார்கள். நாச்சியப்பன் என் னையும் தொடர்பு கொண்டு பேசினார். ஆனால் நான் அதில் கலந்து கொள்ளவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சித் தலைவர்கள் புதுடில்லி செல்கின்றார்கள். அத்துடன் வேறு கட்சித் தலை வர்களும் செல்கின்றனர்.தமிழ்க் கட்சிகளின் ஒட்டு மொத்தமான நிலைப்பாட்டை இந்தியா அறிவதற்காகவே இந் தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேசம யம் தமிழகத்தில் இப்போது நிலைமைகளில் பெரும் மாற் றங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்திய மார்சிஸ்ட் கட்சி அண்மையில் சென்னையில் ஒரு பெரிய மாநாடு நடத்தி இருந்தது. பாரதீய ஜனதாக் கட்சி அடுத்த மாதம் அத்தகைய ஒரு மாநாட்டை நடத்த உள்ளது. எனவே இந்தி யாவைப் பொறுத்த வரையில் ஆளும் கட்சிக்கு அப்பால் ஏனைய கட்சிகளும் எமது விடயத்தில் அக்கறை செலுத்துகின்றன. தமிழக சட்ட சபையிலும் எமக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல தலைவர் கள் தொடர்ந்து எமக்காகக் குரல் கொடுத்து வருகிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வைச் சந்தித்துப் பேசும் ஏற்பாடு கள், முன்முயற்சிகள் ஏதும் எடுக்கப்பட்டிருக்கின்றனவா?

தமிழக முதல்வரை சந்திக்க வேண்டிய தேவை இருக்கின் றது. அவரை நாங்கள் சந்திப்போம். அவர் சட்டசபையில் பல தீர் மானங்களை நிறைவேற்றியுள் ளார். இலங்கை தமிழர் பிரச்சினை தீரும் வரையில் தமிழ் நாட்டு அரசின் நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்திருக் கின்றார். ஆகவே நாம் அவரு டன் சந்திப்பொன்றை மேற் கொள்ளவுள்ளோம். அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். கோத்தபாய ராஜபக்ஷ அண் மையில் “ஹெட்லைன்ஸ் ருடே’ தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில், புலிகளை ஒழித்து விட்டதால் தமிழர்களுக்கு இனி மேல் உரிமைகளை வழங்கவேண் டியதில்ல என்று கூறி இருக்கிறாரே அது பற்றி உங்கள் கருத்து என்ன? இந்த மாதம் 4ஆம் நாள் அரசு டனான பேச்சுக்கு அடுத்த திகதி குறிப்பதற்கு முன்பாக சில விட யங்களை அரசு தெளிவுபடுத்த வேண் டும் என்ற முடிவை நாங்கள் எடுத்த பொழுது, கோத்தபாய வின் பேட்டி பற்றி எமக்குத் தெரிந்தே இருந்தது. அரசாங்கத்தின் தற்போதைய போக்கை பார்த்தால் அரசில் கோத்த பாயவின் குரல் ஓங்குவதைப் போலவே தெரிகின்றது.

புலிகளுக்கும் அக்கா கணக்குக்கும் பணம் கொடுத்தவர்கள் யார்?

2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 200 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாகக் கூறியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சுனாமி நிவாரண நிதியில் 300 மில்லியன் ரூபா களவாடி தனது சகோதரியின் கணக்கில் வைப்பிலிட்டவர் யார் என மக்கள் விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றுக்குச் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்கள் வாக்களிப்பதனை தடுத்து நிறுத்தும் நோக்கில் புலிகளுக்கு இந்தப் பணம் வழங்கப்பட்டது. இந்த பணத்தைப் பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் நவீன ரக படகுகளை கொள்வனவு செய்தனர்.எனவும் தெரிவித்தார்

ஒஸ்லோவில் அண்மையில் நடந்த படுகொலைகளை அடுத்து ஸ்தாபன அரசியல் கட்சிகளும் செய்தி ஊடகமும் தங்கள் பின்னணியை மூடி மறைப்பதில் முனைப்புக் காட்டுகின்றன. 32 வயதான கொலைகாரர் ஆண்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரீவிக் தனியே செயல்பட்டாரா, இல்லையா என்பது இன்னும் தெளிவாகவில்லை. என்றாலும் ஒன்று மட்டும் உறுதி. அதாவது அமெரிக்காவின் அனைத்து அரசியல் கட்சிகளினதும் ஆதரவிற்குட்பட்ட மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவ ஸ்தாபனம் மற்றும் செய்தி ஊடகத்தின் ஆதரவைக் கொண்ட முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரத்திற்கும் 76 பேரைக் கொன்ற பாசிஸ்ட்டின் அரசியல் உந்துதல்களுக்கும் இடையே நிச்சயமான தொடர்பு உள்ளது. முதல் நீதிமன்ற விசாரணையின்போது ப்ரீவீக் நாட்டினுள் ஏராளமான முஸ்லிம் மக்களை அனுமதித்து நோர்வீஜியக் கலாசாரத்தைச் சீரழித்துவிட்டதால் நோர்வேயின் சமூக ஜனநாயக தொழிற்க் கட்சியின் மீது மிக அதிக சேதத்தை ஏற்படுத்த விரும்பியதாக அறிவித்தார். அவருடைய இஸ்லாமிய எதிர்ப்பு பிளக் வலைத்தளக் கட்டுரைகள் மற்றும் 1,500 பக்க அறிக்கை ஆகியவற்றிலிருந்து ப்ரீவிக் முஸ்லிம் குடியேறியவர்கள் மற்றும் அவர் கருதிய மார்க்சிஸ்ட்,இடது,பன்முகக் கலாசாரம் மற்றும் அரசியல் உண்மை ஆகிய அனைத்தின் மீதும் தன் இரத்த வெறித் தாக்குதலை நடத்த விரும்பினார் என்பது தெளிவு. அவர் நோர்வீஜிய தொழிற் கட்சியை இலக்கு கொள்ள முற்பட்டதன் காரணம் அவர், அதை ஒரு மார்க்சிஸக் கட்சியாகவும் குடியேறுபவர்கள் சார்புடையது என்று தவறாகக் கருதியதுதான். ப்ரீவிக்கின் வெளிப்படையான பாசிசக் செயல்கள் மற்றும் நன்கு அறியப்பட்டுள்ள தீவிர வலதுசாரித் தொடர்புகளாலும் இன்னும் துல்லியமாகக் கூறினால் அவற்றால் தான் செய்தி ஊடகம் அவருடைய கொடூரத்தை எடுத்துக் காட்டும் அரசியல் பிரச்சினைகளை மூடி மறைக்கப் பெரும் முயற்சிகளை எடுத்து அவர் ஒரு தனியான மனநிலை குழம்பியவர் என்பதைத் தவிர வேறு ஏதும் இல்லை எனச் சித்திரிக்க முற்பட்டுள்ளது. ஆனால்,அவருடைய கருத்துகள் ஒன்றும் ஒரு தனிநபரின் நோய்வாய்ப்பட்ட மனநிலையின் உருவாக்கங்கள் அல்ல. மாறாக ஒரு நோய்வாய்ப்பட்ட சமூக அமைப்பு முறையின் விளைவுகள்தாம். அவர் தன்னுடைய இணையத்தள வெளியீட்டிற்கு முஸ்லிம் எதிர்ப்பு பிளக் தளக் கட்டுரைகள், அமெரிக்க கூஞுச் கச்ணூtதூ இயக்கம் மற்றும் ஐரோப்பாவிலுள்ள ஜனரஞ்சகவாத வலதுசாரிக் கட்சிகளிலிருந்து பாசிச பிதற்றல்களை ப்ரீவிக் அப்படியே எடுத்துக்கொண்டது மட்டும் இல்லாமல், முக்கிய முதலாளித்துவக் கட்சிகள், அரசாங்கங்கள், பொது அதிகாரங்கள் மற்றும் செய்தி ஊடக அலுவலகங்களின் பிரசாரங்களிடம் இருந்தும் எடுத்துக் கொண்டார். இத்தகைய இடைவிடாத இனவெறுப்பு,தேசியவாதம்,குடியேறுவோருக்கு எதிரான சோவனிஷம் மற்றும் இராணுவவாதம் ஆகியவை ஒஸ்லோவில் நடைபெற்ற நடவடிக்கை போன்றதற்கு ஊக்கம் கொடுத்தல் என்பது காலத்தினால் விளைந்துவிடக் கூடியதுதான். இஸ்லாமிய எதிர்ப்புப் போராட்டத்தை தங்கள் செயற்திட்டத்தின் மைய அச்சாகக் கொண்ட கட்சிகள் ஆஸ்திரியா, இத்தாலி,நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளின் அரசாங்கங்களில் இருந்துள்ளன. அல்லது தற்பொழுது உள்ளன. பிரான்ஸில் பாசிச தேசிய முன்னணி கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் இனவெறி,குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகளை முக்கிய கட்சிகள் எதிரொலிக்கின்றன. இவற்றின் தன்மையானது ஜனாதிபதிப் பதவிப் போட்டிக்கு அக்கட்சி தீவிர ஆர்வம் கொண்டுள்ள அளவிற்கு உள்ளது. நோர்வேயில் ப்ரீவிக் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்த இஸ்லாமிய எதிர்ப்பு முற்போக்குக் கட்சி அரசியல் ஸ்தாபனத்தில் இணைக்கப்பட்டு நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய கட்சியாக வெளிப்பட்டுள்ளது. பன்முகக் கலாசார சமூகத்திற்கு எதிரான அவருடைய போராட்டத்தில் ப்ரீவிக் முக்கிய ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்களின் தலைவர்களிடமிருந்து கருத்துகளைப் பற்றி எடுத்துள்ளார். ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல், பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கமரூன் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கெலாஸ் சார்கோஸி ஆகியோர் அனைவரும் பகிரங்கமாக “பன்முகக் கலாசார முறை’ அதாவது பல கலாசாரங்களில் இருந்து வரும் மக்கள் அமைதியாக, ஒன்றாக இருத்தல் என்பது தோற்றுவிட்டது என்று கூறியுள்ளனர். முதலாளித்துவ இடதானது முஸ்லிம்களுக்கு எதிரான தூண்டுதலில் சேர்ந்துள்ளது. பிரான்ஸிலும் பெல்ஜியத்திலும் சமூக ஜனநாயகக் கட்சியினர் “தீவிர இடது’ என அழைக்கப்படும் குழுக்களின் ஆதரவுடன் முஸ்லிம் தலை மறைப்புகள்,பர்காக்கள் ஆகியவற்றின் மீது பாகுபாடான முறையில் தடைகளுக்கு ஆதரவைக் கொடுத்துள்ளனர். ஜேர்மனிய சமூக ஜனநாயகக் கட்சியில் அதன் முக்கிய உறுப்பினர்களிடம் காணப்படும் முஸ்லிம் எதிர்ப்புக் கருத்தாய்வுகளில் திலோ சராஜின் உடையவை நியாயமான கண்ணோட்டம் என்று கருதப்படுகின்றன. படுகொலைகளைத் தொடர்ந்து உடனடியாகப் பல முஸ்லிம் எதிர்ப்பு பிளக் வலைத்தளக் கட்டுரை எழுதும் வலுதுசாரி ஜனரஞ்சகவாதக் கட்சிகளும் தேசிய கலாசாரத்திற்கு முரசு கொட்டுபவர்களும் ப்ரீவிக்கின் செயல்களைக் கண்டிப்பதன் மூலம் அவரிடம் இருந்து தங்களை ஒதுக்கிக் காட்டிக்கொள்ள முற்பட்டுள்ளன. இது வெறும் தந்திரோபாயம்தான். ஜேர்மன் கஃ (கணிடூடிtடிஞிச்டூடூதூ ஐணஞிணிணூணூஞுஞிt) வெளியிட்டுள்ள வலைத்தளக் கட்டுரை ஒன்றின்படி ப்ரீவிக்கின் அறிக்கை மிகச் சிறந்தது. ஆனால், அவரின் தாக்குதல் எதிர்விளைவுடையதாகவுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது. ப்ரீவிக்கின் அறிக்கையில் ஐரோப்பா இஸ்லாமிற்குத் தாழ்ந்து நிற்பதைக் கண்டிப்பதாக மேற்கோளிடப்பட்டுள்ள ஜேர்மனிய செய்தியாளர் ஹென்ரிக் எம்.ப்ரோடர், அவருடைய முஸ்லிம் எதிர்ப்புக் கருத்தாய்வுகளுக்கும் ஒஸ்லோ படுகொலைக்கும் இடையே தொடர்பு இல்லை என்று மறுத்துள்ளார். ஜேர்மனியின் முக்கிய செய்தித்தாளான ஈடிஞு ஙிஞுடூt டில் அவர் தன்னுடைய விரோதிகள் இஸ்லாமைக் குறைகூறுபவர்கள் மீது படுகொலைக்கான பொறுப்பைச் சுமத்துவதன் மூலம் அறநெறி ஆதாயம் பெற முற்படுகின்றனர் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். இஸ்லாமைக் குறைகூறுபவர்களுள் ப்ரோடர் தன்னையும் சராஜின் மற்றும் டச்சு வலதுசாரி ஜனரஞ்சகவாத கீர்ட் வில்டெர்ஸையும் சேர்த்துக் கொள்ளுகிறார். பல ஆண்டுகளாக ஈஞுணூ குணீடிஞுஞ்ஞுடூ, ஈடிஞு ஙிஞுடூt ஆகியவற்றின் பக்கங்களை ப்ரோடர் நிரப்பியிருப்பதுடன், பல வலைத்தளக் கட்டுரைகள், நூல்கள் மூலமும் ஐரோப்பியர்கள் இஸ்லாமிற்கு நிபந்தனையற்ற சரணடைதலை எதிர்த்து எச்சரிக்கைகளைக் கொடுத்துள்ளார். அவருடைய கருத்துகள் ப்ரீவிக்கினால் மேற்கோளிடப்பட்டுள்ளது குறித்து அவர் வருத்தப்படுகிறாரா என்று செய்தியாளர் ஒருவரால் கேட்கப்பட்டபோது, ப்ரோடர் நான் இன்றும் கூட அதே கருத்துகளைத்தான் கூறுவேன் என்று விடையிறுத்தார். ஒரு குறுகிய காலத்திற்குப்பின் ப்ரோடர் தன்னுடைய பிளக் வலைத்தளத்தில் நன்மையின் அச்சு என்பதில் தன் மேற்கோள்களைக் கொண்டுள்ள ப்ரீவிக்கின் அறிக்கையில் இருந்து நீண்ட பத்திகளை வெளியிட்டார். இம்மேற்கோள்கள் தொடக்கத்தில் மற்றொரு பிளக் வலைத்தளக் கட்டுரையாளர் ஊடீணிணூஞீட்ச்ண உடையவை. அவர் வலது தீவிர ஆணூதண்ண்ஞுடூண் ஒணிதணூணச்டூ,எச்tஞுண் ணிஞூ ஙடிஞுணணச் மற்றும் ஐண்டூச்ட் ஙிச்tஞிட போன்ற வலைத்தளங்களிலும் எழுதுபவர். ப்ரீவிக் தன்னுடைய அறிக்கையைத் தயாரிப்பதற்கு ஊடீணிணூஞீட்ச்ண தான் முக்கிய ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டவர் ஆவார். தீவிர வலதுசாரி முஸ்லிம் எதிர்ப்புச் சக்திகள் மற்றும் தீவிர செய்தி ஊடகங்கள் ஈடிஞு ஙிஞுடூt,ஈஞுணூ குணீடிஞுஞ்ஞுடூ ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகள் பற்றி அத்தாட்சி தேவையாக இருந்ததால் ப்ரோடர் அவற்றை அளித்துள்ளார். தீவிர வலுதசாரி இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கங்களும் ஸ்தாபன மயமான முதலாளித்துவ வட்டங்கள் அவற்றிற்குக் கொடுக்கும் ஊக்கமும் முதலாளித்துவ சமூகத்தின் நெருக்கடி மற்றும் சிதைவைத்தான் பிரதிபலிக்கின்றன. ஆரம்ப தயக்கத்திற்குப் பின் ஜேர்மனியின் ஆளும் வர்க்கம் 1930 களில் ஹிட்லருக்கு ஆதரவைக் கொடுத்து தேசிய சோசலிஸ்டுகளை தொழிலாளர் இயக்கத்தை நசுக்குவதற்கும் பொருளாதாரத் தேக்கத்திலிருந்து நாட்டை விடுவிக்கத் தேவையான புதிய போரைத் தொடக்குவதற்கும் ஒரு திறமையான கருவி என்று கருதியது. இன்று அருகிவிட்ட முதலாளித்துவ சமூகம் மீண்டும் முதலாளித்துவ வர்க்கம் பாசிசச் சக்திகளுக்கு ஆதரவைக் கொடுப்பதைத்தான் காண்கிறது. செப்டெம்பர் 11,2001 தாக்குதல்களுக்குப் பின் இஸ்லாமிய எதிர்ப்புப் போராட்டம் முதலில் ஆப்கானிஸ்தான் பின்னர் ஈராக், இப்பொழுது லிபியா என ஏகாதிபத்திய போர்களுக்கு ஆதரவைத் திரட்டுவதற்கு முக்கிய வழிவகையாயிற்று. அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்,ஈராக் போரை “சிலுவை யுத்தம்’ என்று குறிப்பிட்டபோது, அது ஒன்றும் ப்ரீவிக்கில் இருந்து அதிக தொலைவில் இருந்துவிடவில்லை. ப்ரீவிக் தன்னை சிலுவை யுத்தத்தை நடத்தியவர்களில் தற்காலத்திய மறுபிறப்பு என்று கருதுகிறார். அதேநேரத்தில் முஸ்லிம் குடியேறுபவர்களுக்கு எதிரான தூண்டுதல்கள் தொழிலாளர் வர்க்கத்தில் பிளவுகளை ஏற்படுத்தவும் பொதுநலச் செலவுக் குறைப்புகள், வேலையின்மை, பெருகிய சமூக சமத்துவமின்மை இவற்றிற்கு எதிரான சீற்றத்தை வலதுசாரித் திசைகளில் திருப்பப் பயன்படுத்தப்படுகிறது. எல்லா வலதுசாரி ஜனரஞ்சகவாதக் கட்சிகளும் இவ்வகையைத்தான் கையாளுகின்றன. அவை சமூக வார்த்தை ஜாலங்களை தேசியவாதம், வெளிநாட்டவர் வெறுப்பு ஆகியவற்றுடன் இணைகின்றன. தொழிலாளர் வர்க்கத்திற்கு முக்கிய ஆபத்து பாசிச சக்திகளின் உடனடியான வலிமையல்ல. அவை தற்பொழுது அதிகமாக மக்கள் ஆதரவைக் கொண்டிருக்கவில்லை. தொழிலாளர் வர்க்கம் தொடர்ந்து அரசியல் ரீதியாக முதலாளித்துவம் மற்றும் அதன் கட்சிகளுக்குத் தாழ்ந்து நிற்பதுதான் பெரிய ஆபத்து ஆகும். அவை உத்தியோகபூர்வ இடதாயினும் வலதுசாரிக் கட்சிகள் ஆயினும் ஏனெனில் அவை தொழிலாள வர்க்கத்தை முடக்கி முதலாளித்துவத்தின் வலதுசாரித தீவிர அமைப்புகளின் குழப்பத்தைப் பயன்படுத்துவதற்கும் மத்திய தர வர்க்க அடுக்கு,தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகியோரின் சில பிரிவுகளை நெறிபிறள்வடையச் செய்கின்றன. முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாளர் வர்க்கம் ஒரு சுயாதீன இயக்கமாக வெளிப்படுவதைத் தடுப்பதில் முக்கிய பங்கு தொழிற்சங்கங்கள், மத்தியதர வர்க்க முன்னாள் இடது என்னும் அவற்றின் நட்பு அமைப்புகளால் பங்காற்றப்படுகின்றன. ஒஸ்லோவில் நடைபெற்ற கொடூரத்தாக்குதல் தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீன வலிமை இறுதியில் அடக்கப்படும் என்ற நிலை பற்றிய எச்சரிக்கைதான். ப்ரீவிக் தன்னை ஒரு தியாகி எனவும் மேலும் ஒரு புதிய போர்க்குணமிக்க தீவிர வலதுசாரி இயக்கத்தின் முன்மாதிரி எனவும் காண்கிறார். இத்தகைய சக்திகள் பிரதிபலிக்கும் ஆபத்தைத் தோற்கடிப்பதற்கு தொழிலாளர்கள் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து முறித்துக் கொண்டு சமூகநலச் செலவு வெட்டுகள், வேலையின்மை, ஊதியக் குறைப்புகள் இவற்றிற்கு எதிரான சுயாதீனப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும். அது ஒரு சோசலிஷ வேலைத்திட்ட அடிப்படையில் இருக்க வேண்டும். போராட்டத்திற்கான புதிய அமைப்புகள் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தி அணிதிரட்டி இணைக்கப்பட வேண்டும் என்பதுடன் ஒரு புதிய புரட்சிகரத் தலைமையும் கட்டமைக்கப்பட வேண்டும். உலக சோசலிச இணையத்தளத்திலிருந்து

யாழில். வருடத்திற்கு 500 இளவயது கர்ப்பங்கள் மற்றும் 300 பாலியல் துன்புறுத்தல்கள்!
  யாழ்.மாவட்டத்தில் வருடந்தோறும் 500 இளவயதுக் கர்ப்பங்கள் மற்றும் 300 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாவதாக சுகாதார பணிமனையின் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

   சமூக சீர்திருத்த குறுந்திரைப்பட விழா சேர் பொன்.இராமநாதன் வீதியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றபோது இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

   தற்போதைய கணக்கெடுப்பின் விவரங்கள் அடிப்படையில் யாழ்.மாவட்டத் தில் 27 ஆயிரம் விதவைகள் உள்ளனர். இதில் யுத்தம் காரணமாக கணவனை இழந்தவர்களும் இயற்கை மரணத்தில் கணவனை இழந்தவர்களும் உள்ளடங்குகின்றனர்.

   இவர்கள் குடும்பத் தலைமைத்துவப் பொறுப்பு வாய்ந்தவர்களாக விளங்குகின்றனர். மேலும், பெண்கள், சிறுவர்கள் என்ற அடிப்படையில் மதிப்பீடு செய்தால் உடல், உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்கள் இவர்களேயாவர். நாள் ஒன்றுக்கு உள ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் 5 பேர் எனப் பதிவாகி உள்ளனர். அங்கவீனம் என்பதும் ஒரு வகையில் உளரீதியான பாதிப்புத்தான்.

   அத்துடன், ஒருமாதத்தில் 60 சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்படுகின்றனர். இவை யாவற்றுக்கும் காரணம் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறைதான்.அண்மைக் காலமாக கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில், இவற்றில் பெற்றோர்களின் பங்கும் உள்ளடங்குகிறது. தமது பிள்ளைகள் எங்கு செல்கின்றனர், யாருடன் உரையாடுகின்றனர் என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு பெற்றோர்களுடையது. சில பெற்றோர்கள் அந்தப் பொறுப்பைப் பெற்றுக் கொள்ளத் தவறி விடுகின்றனர். கல்வி அறிவுள்ள பெற்றோர்கள் மத்தியில் இவ்வாறான பிரச்சினைகள் தலை நிமிர்ந்து நிற்கின்றன. சமுதாயத்தின் மத்தியில் இவை ஆராயப்பட வேண்டும். இவையாவற்றுக்கும் தீர்வுகள் பெற்றோர் மத்தியில் உண்டு.

   அதுமட்டுமல்ல முன்னாள் போராளிகள் என இனங்காணப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் சமுதாயத்துடன் இணைத்துக் கொள்ளப்படல் வேண்டும். இவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள், பாதுகாப்பான வாழ்விடங்கள் ஆகியவற்றை இந்தச் சமுதாயம் தான் வழங்க வேண்டும்.

   வலுவிழந்தோர்கள், உளரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரை சமூகம் மதிக்க வேண்டும். சமூகத்துடன் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.ஒருபுறம் ஆக்கபூர்வமான செயற்றிட்டங்கள் நடந்து கொண்டிருந்தாலும் மறுபுறம் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றவாறு உள்ளன.

   கொலைகள், கொள்ளைகள் என்பவற்றுக்கு வறுமை ஒரு காரணமாக அமைந்துள்ளது. இவர்களுக்கு அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, சமூகத்துடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

கனடாவிலுள்ள தமிழ் சமூகத்தினருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த பிரபல தமிழ் வர்த்தகர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் மொன்ரியலில் வசித்துவந்த சுந்தரம் யோகராஜா (வயது 64) என்பவரே கடந்த புதன்கிழமை குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சுந்தரம் யோகராஜாவின் இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றபோது பலநூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பாரியளவிலான முதலீடுகளை மேற்கொண்டு கடின உழைப்பில் ஈடுபடுபவர்களுக்கு அவர் (சுதந்திரம் யோகராஜா) ஒரு முன் உதாரணமானவர். முதலில் கனடாவில் வர்த்தகத்தை ஆரம்பித்தவர் பின்னர் குடும்பத்தினருடன் இங்கு வாழ்ந்து வருகின்றாரென தெற்காசிய நாடுகளின் பெண்கள் சமூக நிலை உறுப்பினர் ரமணி பாலேந்திரா கூறியுள்ளார்.

சுந்தரம் யோகராஜன் வீட்டிற்கு அருகிலிருந்தே குப்பைகளை அகற்றுவது குறித்து அயலவரான மானுவல் மார்டினெஷ் (வயது 58) என்பவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்தே மானுவல் யோகராஜாவைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மானுவலைக் கைது செய்து விளக்கமறியலில் வைத்திருப்பதுடன் இச்சம்பவம் தொடர்பாக அவர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

நண்பர்கள், உறவினர்களால் யோகா என அழைக்கப்படும் யோகராஜா, 1980 ல் தமிழ் அகதியாக கனடாவுக்குள் தஞ்சம் புகுந்திருந்து ஒரு வன்முறைச் சம்பவத்தின் மூலம் மரணமடைந்துள்ளார்.

இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக இலங்கையிலிருந்து தமிழர்கள் வெளியேறுகின்றனர். ஆனால் யோகராஜா வன்முறை மூலம் மரணித்திருப்பது கவலையான விடயமென பாலேந்திரா கூறினார்.